செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 1, 2020

செய்தியும், சிந்தனையும்....!

எதிர்பாருங்கள்!


திருப்பதியில் இலவச அடையாளச் சீட்டுப் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!


சரிதான், கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம்.


தரிசனத்துக்குத் தட்சணை, பண வசூல் கூடாது என்று வி.எச்.பி. சார்பில் கொஞ்ச காலம் முன்வரை கதறிக் கொண்டிருந்தாரே வேதாந்தம் அது என்னாயிற்றாம்?


 


மதம் மாறக் கூடாதா?


திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது: - அலகாபாத் உயர்நீதிமன்றம்.


மதம் மாறுதல் தனி மனிதனின் உரிமை இல்லையா? இதில் ஏதோ ஒரு 'வாடை' வீசுகிறதே!


 


எல்லை மீற வேண்டாம்!


ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தேவையை உறுதி செய்ய புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: - கஸ்தூரிரெங்கன், தேசியக் கல்விக் கொள்கைக் குழுவின் தலைவர்.


கஸ்தூரி ரெங்கன் - விண்வெளி ஆய்வோடு தன்னை நிறுத்திக் கொள்வதே உத்தமம். கல்விக் கொள்கையை வகுப்பவர் கல்வியாளராக மட்டுமே இருக்க முடியும்.


 


‘கடவுள் முருகன்' அரசியல்


தி.மு.க.வின் முகத்திரையை அகற்றவே வேல் யாத்திரை: - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.


ஓ, இது ஆன்மிக யாத்திரையல்ல - அரசியல் யாத்திரையோ! பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது - மியாவ், மியாவ்!


அரசியல் யாத்திரை என்றால் வேல் - முருகன் விமர்சிக்கப்பட்டால், அதற்கு யார் பொறுப்பு?


No comments:

Post a Comment