அடுத்த புரோக்கர் ரெடி!
ரஜினியுடன் எஸ்.குருமூர்த்தி ஆலோசனை.
நான் அரசியல் புரோக்கர்தான் என்று அன்று சொன்னார் சோ.ராமசாமி. இன்று அந்தப் புரோக்கர் வேலையைத் தொடர்கிறார் இந்த சாமிநாதன் குருமூர்த்தி.
சங்கராச்சாரியாரை விஜயகாந்த் சந்தித்தபோது நீங்களும், ரஜினிகாந்தும் சேர்ந்து அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குங்கள் என்று தூபம் போட்டவர் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்பது ('குமுதம்', 18.1.2001) நினைவில் இருக்கிறதா?
சங்கர மடங்களும், பார்ப்பனர்களும் ரஜினியை அரசியலுக்குள் திணிப்பதற்கான காரணம் புரிகிறதா?
திறந்த வீடு தமிழ்நாடுதான்!
கருநாடக மாநிலத்தில் கன்னட மொழி தேர்வைக் கட்டாயமாக்க - விரைவில் புதிய சட்டம்: - முதலமைச்சர் எடியூரப்பா.
இந்தியாவில், தமிழ்நாடு மட்டும்தான் திறந்த வீடு - தமிழ்நாட்டில் இருக்கும் அதிகாரிகள் தமிழில் மனு கொடுத்தால் ஏற்கமாட்டார்கள்.
இலஞ்சமல்ல - அன்பளிப்பாம்!
பண்டிகைக் காலங்களில் நிறுவனங்களிடமிருந்து அன்பளிப்புப் பெற்ற
35 அதிகாரிகளிடமிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரூ.4 கோடி பறிமுதல்.
அன்பளிப்பு என்பது இந்த இடத்தில் எதையோ எதிர்பார்த்து அளிக்கப்படும் இலஞ்சம். பண்டிகை என்பது இலஞ்சத்தை ஊக்குவிக்கும் ஒழுக்கக் கேடாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
மனிதாபிமானமா இது?
ரஜினி இல்லம் முன் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு!
'அவர்தான் எனக்கு உடல்நிலை சரியில்லை - ஆளைவிடுங்கள்' என்கிறாரே - அவரைப் போய் தொந்தரவு செய்வது மனிதாபிமானமா?
No comments:
Post a Comment