பீகார் தேர்தல் தொடர்பான முறைகேடுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 12, 2020

பீகார் தேர்தல் தொடர்பான முறைகேடுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை


சென்னை, நவ. 12- பீகார் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி  பெற்றிருக்கும்  முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழ கத்தின் சார்பில்,  மனமார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.


பீகாரின் இளம் தலைவ ராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு  உயர்ந்துவரும்  திரு. தேஜஸ்வி யாதவ் தலை மையில்,  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ள தனிப் பெரும் கட்சியாகப் பீகார் மாநிலத் தில்  வெற்றி பெற்றிருப்பது,  அந்த மாநிலத்தின் ஜனநாய கத்திற்கு நல்ல உயிரோட்டத் தையும், துடிப்பான ஊக்கத் தையும் அளித்திடக் கூடியது.


‘கரோனா’ காலத்தில் பீகார் சட்டமன்றத் தேர்த லையும், பல மாநிலங்களில் இடைத் தேர்தலையும், தேர் தல் ஆணையம் நடத்தியிருப் பது இந்திய ஜனநாயகத்தின்  வலிவையும் பொலிவையும்  பிரதிபலிக்கிறது. ‘மகாகத்பந் தன்’  கூட்டணி சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள முறை கேடுப் புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல்கள் எந்தவிதத் தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக  நடத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தினம் ஒவ்வொரு இந்தியக்  குடிமகனின் எதிர்பார்ப்பா கவும் இருக்கிறது என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன். அந்த எதிர்பார்ப்பு முழுமை யாக நிறைவேறினால்தான், நமது நாட்டில் ஜனநாயகத் தின் வளமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் என் பதை அனைத்துத் தரப்பின ரும் உணர வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறேன்.


இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர் கள் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.


No comments:

Post a Comment