இது என்ன ஜனநாயகம்?
தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் ரத்து.
எங்கள் மாநிலத்தில், எங்கள் அரசு செலவில், எங்கள் மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு நாங்கள் மேற்படிப்புக்கு ஏற்பாடு செய்தால், யாரோ, எங்கேயோ இருந்துகொண்டு, அதெல்லாம் கூடவே கூடாது என்று சொல்லுவது என்றால், இதுதான் இந்திய ஜனநாயக நாட்டின் நடப்பா? மாநிலங்கள் என்றால் யாசகம் கேட்கும் நிலைதானா?
ஊருக்கு இளைத்தவர்கள்!
பெருந்தொகைகளைக் கடனாகப் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். ஆனால், சிறு தொகைகளைக் கடனாகப் பெற்றவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்: - சென்னை உயர்நீதிமன்றம்
நியாயமான குற்றச்சாட்டு இது. இட ஒதுக்கீட்டிலிருந்து - இதுபோன்ற பிரச்சினைகள்வரை ஊருக்கு இளைத்தவர்கள் அடிதட்டு மக்களே - அரசும் அப்படித்தான் - நீதிமன்றங்களும் அப்படித்தான்!
கடவுள் தடுக்காதது ஏன்?
சூதாட்டத்தில் தோற்றுப்போன ஆசாமி திருச்சி சங்கிலியாண்டவர் கோவிலுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை.
ஏன், கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்? இப்பொழுது என்ன செய்வார்கள் - கோவில் புனிதம் கெட்டது; சுத்திகரிக்க வேண்டும் என்று கூறி, அதற்கான சடங்குகளைத் தடபுடலாக நடத்தி, புரோகிதக் கொள்ளை மட்டும் தவறாமல், தட்டாமல் நடக்கப் போகிறது பாருங்கள்.
ஆச்சரியப்படுவதற்கு இல்லை
தமிழர்களின் உண்மையான புத்தாண்டான தை முதல் நாள் பொங்கல் விழாவுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவிப்பு.
எந்தக் குடுமியாவது இதை எதிர்த்துக் கூட வழக்குத் தொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
No comments:
Post a Comment