கடலூர் மாவட்ட கழக சார்பில் ‘விடுதலை' சந்தா வழங்கும் நிகழ்வு 31.10.2020 சனி மாலை 5 மணிக்கு கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் நடந்தது. மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தமிழன்பன், கடலூர் எழிலேந்தி, நெய்வேலி இரத்தின சபாபதி, குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கனகராஜ், அ.கி.ஒன்றியம் ராஜேந்திரன், முத்துக்குமார், தமிழ்வாணன் ஆகியோர் சந்தாவினை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினர். மாவட்ட கழக சார்பில் முதல் கட்டமாக 50 சந்தாக்கள் அளிப்பது, தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. நிறைவாக நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டத்தில் 30.10.2020அன்று பொதுக்குழு உறுப்பினர் கே. பி. கலியமூர்த்தி (வயது 85)அவர்களை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். உடன் சி. காமராஜ், தமிழ் சேகர்.
No comments:
Post a Comment