சென்னை, நவ. 12- வணிக நிறுவனங்களுக்கான இணைய தீர்வுகளை வழங்கிவரும் டாடா டெலி பிசினஸ் சர்வீசஸ் (டி.டி.பி.எஸ்), சென்னையின் சி.எக்ஸ்.ஓ என்ற கருத்தரங்கை நடத்தியது. முன்னணி தொழில் நிறுவனங் களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் தொழில்நுட்ப நன்மைகளுடன் உங்கள் வணிகத்தை மறு தொடக்கம் செய்யுங்கள். என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் டாடா டெலி பிசினஸ் சர்வீசஸ் தொழில் நுட்ப சேவையால் எவ்வாறு வணிகத்தை அதிகரிக்க உதவுகிறது என்று எடுத்துரைக்கப்பட்டது.
வணிகத் தொடர்ச்சியைத் தக்கவைக்க பல்வேறு இணைப்பு மற்றும் ஒத்துழைப்பு கருவிகளை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேவையை இந்த தொற்றுநோய் தூண்டியுள்ளது. இதில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புதிய இயல்புநிலைக்கு ஏற்ப சரியான கருவிகளை அறிமுகப் படுத்ததுவோம் இந்த புதிய இயல்பை நிவர்த்தி செய்ய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் புதுமையான தீர்வு களை சந்தைக்குக் கொண்டுவருவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என டாடா டெலிசர்வீஸின் துணைத் தலைவர் காளி தாஸ் கே.எஸ்., உரையாற்றினார்.
உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வளரத் தொடங்கிய காங்கிரஸ்
லக்னோ, டிச. 12- உத்தரப்பிரதேச மாநில இடைத் தேர்தலில் 2 தொகுதி களில் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பாஜக அனைத்து இடங்களையும் கைப்பற்றி உள்ளது. ஆயினும் வாக்கு எண்ணிக்கை சதவிகிதத்தின் படி இதற்கு முந்தைய தேர்தல்களை விட பாஜக குறைவாகப் பெற்றுள்ளது. பாஜக விடம் இருந்து 7.53% வாக்குகள் குறைந்து அவை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளன.
பங்காரமாவ் தொகுதியில் ஆர்த்தி பஜ்பாய் மற்றும் கடம்பூர் தொகுதி யில் கிருபா சங்கர் ஆகியோர் இரண்டாம் இடத்தில் வந்துள்ளனர். எனவே 2 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அசோக் சிங், “சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கட்சிக்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை. ஆயினும் காங்கிரஸுக்கு மாநிலத்தில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியை இரு தொகுதிகளில் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment