காவல்துறை விசாரணை
சென்னை, நவ. 13- சென்னை அருங்காட்சியகத்தில் இருந்து பைரவர் சிலை கடந்த ஆண்டு காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் விசாரிக்க வில்லை. பைரவர் சிலை போலவே, அருங்காட்சியகத்தில் இருந்து ஏராளமான புராதன சிலைகள் காணாமல் போய் இருக்கலாம் என்று டில்லிபாபு மீண்டும் குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, பைரவர்சிலையை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்திஉள்ளனர். அருங்காட்சியக ஊழியர்கள் உதவியுடன் சிலைகள் திருடப்பட்டு இருக்கலாம் என்றுகூறப்படுகிறது. இதனால் ஊழியர்களை விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த திருமலைச்சேரியில் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோமநாத சாமி கோயில் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான கல்தூண்கள், 12 யோகி தேவி சிலைகள், பைரவர், துவார பாலகர்கள் கற்சிலைகள் திருடப்பட்டதாக டில்லிபாபு என்பவர் வரலாற்று ஆதாரங்களுடன் 2018ஆம் ஆண்டு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் என குறிப்பிட்டு, வாலாஜாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் அந்த வழக்கை ஒப்படைத்தனர். அந்த சிலையே தற்பொழுது எழும்பூர் அருங்காட்சியகத்திலிருந்து காணாமற்போனதாக காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது குறித்து டிச.11-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ. 13- நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது குறித்து பொது நூலக இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதிப்பாளர்கள் மற்றும் நூல் விற்பனையாளர்கள் டிச.11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது நூலகஇயக்குநர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.நாகராஜ முருகன் 12.11.2020 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது நூலக இயக்ககத்தின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கு 2018 மற்றும் 2019ஆம் ஆண்டில் பதிப்பான தமிழ், ஆங்கில நூல்கள் வாங்க பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து நூல்கள் பரிசீலனைக்கு வரவேற்கப்படுகின்றன. அரசால் அமைக்கப்படும் நூல் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் பதிப்புசெய்யப்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை அனுப்பலாம்.
நூல்களின் பிரதிகள் மற்றும் ஏ,பி,சி படிவங்களுடன் (குறுந்தகடு) டிச.11ஆம் தேதிக்குள், பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை - 2என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நூல் பதிவு கட்டண விவரம்,நூல்கள் சமர்ப்பிப்பதற் கான வழிமுறைகள், நிபந்தனைகள் www.connemarapublic librarychennai.com என்ற இணையதளத்தில் வெளியிடப் படும்.
கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் பதிப்புசெய்யப்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை அனுப்பலாம்.
No comments:
Post a Comment