சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளில்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 27, 2020

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளில்....!


இன்று (27.11.2020) சமூகநீதிக் காவலராக என்றென்றும் சரித்திரத்தில் ஒளிவீசும் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாள்! (2008)


அவர்தான் பல்லாண்டு காலமாக மூடப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதிக் கதவை தட்டாமலே திறந்தவர்! அதற்காகவே (காவிகளால்) பிரதமர் பதவியை 10 மாதங்களில் இழந்தவர். அந்த இழப்பை மகிழ்ச்சியோடு, சமூகநீதியைப் பெற்றிட தான் கொடுத்த சரியான விலை என்றவர்; எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார் என்ற பெருமிதத்துடன் மார் தட்டிய மாவீரர்! விழுப்புண் ஏற்ற வெற்றி வீரர்!


சமூகநீதியை சாய்க்க நாளும் நடைபெறும் ச(க்)திகளை முறியடித்து லட்சியங்களில் வெற்றி வாகை சூடிட உறுதியேற்போம்!


வாழ்க வி.பி.சிங்!


வளர்க அவர் செய்த சாதனைகள்!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை,


27.11.2020


No comments:

Post a Comment