வாஷிங்டன், நவ.14 அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், குறிப்பிட்ட சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டை அமெரிக்க தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையில் அங்கம் வகிக்கும் தேர்தல் உள்கட்டமைப்பு அரசாங்க ஒருங்கிணைப்பு கவுன்சில் செயற்குழு மற்றும் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு குழு ஆகியவற்றின் அதிகாரிகள் கூட்ட றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதிபர் தேர்தல் வாக்களிப்பு முறையில் வாக்கு களை நீக்கியது அல்லது இழந்தது, வாக்குகளை மாற் றியது அல்லது எந்த வகையிலும் சமரசம் செய்யப் பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சொல்லப் போனால் இந்த தேர்தல் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பாக நடத்தப்பட்ட தேர்தலாகும்.
எங்கள் தேர்தல்களின் செயல்முறை குறித்து பல ஆதாரமற்ற கூற்றுகள் மற்றும் தவறான தகவல் களுக்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு குறித்து எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment