மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, நவ. 28- தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் நேற்று (27.11.2020) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக மாணவர்களின் கனவினை சிதைத்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது அரசு மருத் துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கடுமை யாக வாதிட்டதன் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பா.ஜ.க. அரசின் இந்தச் சமூகநீதித் துரோகத் திற்குத் துணை போகும் வகையில் - பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த இடஒதுக் கீட்டை அளித்து அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி அரசு அதற்கான கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத் தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக அரசு விழா நடத்துவதிலும் - அதற்கான விளம் பரங்களிலும் நேரத்தைச் செலவிட்ட முதல மைச்சர் பழனிசாமி அவர்கள், மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் துளி கூடக் கவனம் செலுத்தவில்லை.
போராடிப் பெற்ற சமூகநீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக் காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதலமைச்சர் பழனிசாமிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment