ஒற்றைப் பத்தி - ‘கல்லினுள் தீ!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 13, 2020

ஒற்றைப் பத்தி - ‘கல்லினுள் தீ!'


‘‘கடிகாரம் இருக்கிறது. இதன் பெண்டுலம் ஆடுகிறது. மணி முள் மணி காட்டுகிறது. நிமிஷ முள் நிமிஷம் காட்டு கிறது. ஒவ்வொரு மணி நேரத் திற்கும் டாண் டாண் என்று மணி அடிக்கிறது. அதற்கு அப்படி இயங்குவதற்கான அமைப்பை உண்டாக்கினால் அது இயங்குகிறது. இப்போது இரயில் வண்டி இருக்கிறது. இரயிலை யாராவது பிடித்துத் தள்ளுகிறார்களா? அது எவ் வளவு பெட்டிகளை இழுத்துக் கொண்டு போகிறது? அந்த இரயிலுக்கு உண்டான கூட்டை ஏற்படுத்திவிட்டால் அதன்படி அது தாராளமாக இழுக்கிறது. இந்த மாதிரிக் கூட்டு ஏற்படுகின்ற போது இருக்கின்ற சக்தி, கூட்டு பிரி யும்போது பிரிந்து விடுகிறது. இப்போது இங்கே இரண்டு கற்கள் கிடக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கற்களை எடுத்துத் தொட்டுப் பார்த்தால் அது சுடுகின்றதா என்றால் இல்லை. ஆனால், அதே இரண்டு கற்களையும் ஒன்றோடொன்று தட்டினால் நெருப்பு உண்டா கின்றது. அதனால் நாம் கல்லின் உள்ளே இருக்கும் நெருப்புதான் வெளிவந்தது என்று கருத முடியுமா என் றால், அதுவும் இல்லை. மேலும் மூங்கில் இருக்கிறது - மரங்கள் இருக்கின்றன. அவை தனியாக இருக்கும் போது அதில் எந்தவிதமான நெருப்பும் உண்டாவதற்கான சாதனம் இல்லை. ஆனால், அதே மரங்கள் அல்லது மூங்கில் ஒன்றோடொன்று உராயும் பொழுது தீப்பிடித்துக் கொள்வதற்கு அந்த மரங் களின் உள்ளே இருந்த தீ தான் காரணம் என்று சொல்ல முடியுமா? முடியாது!


இங்கே மனிதனில் மட்டும் ஆத்மா என்று ஒன்று தனியாக இருப்பதாகச் சொல்லுகிறார் கள். அது கூட்டுப் பிரியும் பொழுது அதுவும் பிரிகின்றது. சுண்ணாம்பும் மஞ்சளும் கலந் தால் சிவப்பு நிறம் உண்டா கிறது. இதில் சுண்ணாம் பிலாவது சிவப்பிருந் ததா? எதில்தான் சிவப்பிருந்தது? சும்மாவாவது மனிதனை ஏமாற்றுவதற்குக் கற்பிக்கப் பட்டுள்ள கற்பனையே ஆத்மா என்பது தவிர வேறு அல்ல.''


- தந்தை பெரியார்


(‘விடுதலை' 26.5.1954)


கடவுளைக் கற்பித்த வனைக் கூட மன்னித்துத் தொலைத்துவிடலாம் - ஏனெ னில், அவன் முட்டாள்! ஆனால், ஆத்மா - கர்ம வினை என்பதெல்லாம் ஒரு வனை மற்றவன் ஒடுக்கும் முறை! அதனால்தான் ஆத் மாவைப் படைத்தவனை அயோக்கியன் என்கிறார் தந்தை பெரியார்.


 - மயிலாடன்


No comments:

Post a Comment