கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 13, 2020

கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

புதுச்சேரி, நவ. 13- புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்ட துவக்க விழா, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (நவ.13) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கலைஞர் படத்துக்கு மலர்தூவி மரி யாதை செலுத்தப்பட்டது. பள்ளி கல் வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வரவேற் றார். கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழக தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்க ளவை உறுப்பினருமாகிய ஆர்.எஸ்.பாரதி திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு 2 இட்லி, வெண் பொங்கல், கேசரி, சாம்பார் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் முதல்வர் பெருமுயற் சியால் துவக்கப்பட் டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


இங்குள்ள தெருவுக்கு கலைஞர் பெய ரும், பல்கலைக்கழத்தில் ஓர் இருக்கையும், கலைஞருக்கு சிலையும் அமைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். கலைஞருக்கு அர சியல் ஆசானாக இருந்தவர் ஜீவானந்தம். அவரது பெயரில் செயல்படும் பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிய ளிக்கிறது. மிக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, கலைஞர் பெயரிலான காலை உணவுத் திட்டம் தமிழகத்திலும் தொடங்கப் படும்’’ என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment