புதிய நிதி சேவை கிளை திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 13, 2020

புதிய நிதி சேவை கிளை திறப்பு

புதுச்சேரி, நவ. 13- அய்.சி.அய்.சி.அய். புருடென்சியல் எம்.எஃப். இன் முதலீட்டாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் இப்போது ஒரு புதிய முகவரியில் நிதி இல்லத்தை அடையலாம். தரை தளம், எண் 172/2, ஓல்கரெட் கம்யூன், நடேசன் நகர், புதுச்சேரி - 600 005. இதனுடன், தற்போதுள்ள கிளை இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.


புதிய அலுவலகத்தைப் புதுச்சேரியின் அய்டியா ஃபைனான்சியல் சர்விசஸ் எம்.எஃ.டி. கே.கண்ணன் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் அய்.சி.அய்.சி.அய். புருடென்ஷியல் எம்.எஃப்., சில்லறை விற்பனை - பிராந்திய தலைவர் ஜீவன் தாரின் கலந்து கொண்டு இந்நிகழ்வில் பேசியதாவது:


"புதிய அலுவலகம் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சிறப்பாகச் செய்ய அனுமதிக்கும். மேலும் உள்நாட்டில் எங்கள் வளர்ச்சியைத் தொடர உதவும். பரஸ்பர நிதித் துறையின் ஊடுருவலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நாட்டின் மூளை மற்றும் முடக்கு முழுவதும் சில்லறை முதலீட் டாளர்களைச் சென்றடைய நிறுவனம் உறுதியுடன் உள்ளது.


கரோனா நோய்த் தொற்று காலத்தில் பாலின சமநிலை வலியுறுத்தும் பிரச்சாரம்


சென்னை, நவ. 13- இந்துஸ்தான் யூனிலீவர் லிட்-ன் விம் #VimWhatAPlayer எனும் பாத்திரம் கழுவுதலை மய்யமாக கொண்ட மாறுபட்ட பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளது.


தொடர்ந்து கொண்டிருந்த கோவிட் நோய் தொற்று பிரச் சினைகளால் வீட்டு வேளைகளில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டது. இது முழு கதவடைப்பில் தெளிவாக காணப்பட்டது. இந்நிலையை முழுமையாக பயன்படுத்தி பழமையான அணுகுமுறையை உடைத்தெறியும் வாய்ப்பாக கருதுகிறது.


வீட்டு வேளைகளில் உதவி செய்யும் ஆண்கள், புதுமை யாக பாத்திரம் கழுவுவதில் முனைப்பு காட்டினார்.


இப்பிரச்சாரத்தை குறித்து இந்நிறுவன நிர்வாக இயக்குநர் பிரபா நரசிம்மன் கூறுகையில், "இந்திய குடும்பங்களில் வீட்டு வேலைகள் செய்வதில் பாகுபாடு காணப்படுகிறது. சில வீடுகளில் இதற்கு வேலையாட்களை நியமிக்கிறார்கள். மேலும் இது இல்லத்தரசிகளின் வேலை என கருதுகிறார்கள். இது மெல்ல மாற்றத்தை காண்கிறது. எங்கள் ஆய்வின் படி, தற்போதைய தொற்று பரவல் மற்றும் அதனை தொடர்ந்த கதவடைப்பானது இந்திய இல்லங்களில் வீட்டு வேளைகளில் பங்கேற்பதில் சமத்துவம் அளித்தது என தெரிவித்துள்ளார்.


குறைந்த வருவாய் பிரிவினருக்கு நிதி வழங்கல் சேவை விரிவாக்கம்


சென்னை, நவ. 13- இந்தியாவின் மிகப்பெரிய நிதிச் சேவை சந்தையான மைமணிமந்ரா நிறுவனம், 3 மற்றும் 4 அடுக்கு நகரங்களில் அதன் சேவையை விரிவுப்படுத்துவதன் மூலம் குறைவான ஊதியங்களில் பணிபுரியும் நபர்களுக்கு குறைந்த பட்ச கடன் வழங்கவுள்ளது.


இந்நிறுவனம் புதிய கிளைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து பேசிய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் ராஜ் கோஸ்லா கூறுகையில் :


நாங்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி தயாரிப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளோம். இன்றுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளோம்.  ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் வெள்ளை அறிக்கை எங்கள் பி-ஜிட்டல் நிதிச் சேவை சந்தையின் தனித்துவம் மற்றும் வலுவான கட்டமைப்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த ஆண்டு 100 நிதி கூட்டாளர்களிடமிருந்து 60 நகரங்களில் 5397 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை எங்கள் வாடிக்கையாளர் களுக்கு நாங்கள் பெற்று தந்துள்ளோம் என்று கூறினார்.


No comments:

Post a Comment