ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:



  • மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி அருகே போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளோடு நேர்மையுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தையை போராடும் விவசாய அமைப்புகள் நிராகரித்துள்ளன.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • பிரதமர் மோடி தனது மான்கி பாத் வானொலி உரையில் வேளாண் சட்டத்தை நியாயப்படுத்தி பேசிய நிலையில், இனி பேச்சுவார்த்தையில் என்ன இருக்கிறது? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி அருகே போராடும் விவசாயிகளுக்கு அரியானா மாநில பல்வேறு ஜாதி அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.


தி ஹிந்து:



  • அறுபது லட்சம் பட்டியிலினப் பிரிவினர்க்கான ஸ்காலர் சிப் தொகையை மத்திய அரசு நிறுத்தியது குறித்து, ஆதிவாசி களும், தாழ்த்தப்பட்டவர்களும் கல்வியைப் பெறக்கூடாது என்ற பாஜக - ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை நடைமுறைப்படுத்து கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்ட ரில் பதிவிட்டுள்ளார்.

  • பிற்படுத்தப்பட்டோர்க்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம் என பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு எதிராக பாஜக செயல் படுகிறது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

  • நிவர் புயலைத் தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் காற்றழுத்தம் மீண்டும் வலுப்பெற்றதால், இன்று இரவு முதல் தமிழ் நாட்டில் கன மழை பெய்யும் என வானிலை மய்யம் அறிவித்துள்ளது.


பி.பி.சி. நியூஸ் தமிழ்:



  • சமஸ்கிருதச் செய்தித் தொகுப்பை மாநில மொழித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப, தூர்தர்ஷன் தலைமை அலு வலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அந்த அறிக்கை மொழித் திணிப்புக்கான முயற்சி என விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.


குடந்தை கருணா


30.11.2020


No comments:

Post a Comment