ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கமாகும். மற்றவன் தன்னிடம் நடந்து கொள்வதால் தனக்கு மனக் கஷ்டமும், மன வேதனையும், துன்பமும் உண்டாகுமானால், அதனைப்போன்று தானும் மற்றவனிடம் நடந்து கொள்வானாகில் அதுவே தீயொழுக்கம் ஆகும். பிறர் தன்னிடம் நடந்து கொள்ளும் முறையில்தான் இன்பமும், மனச் சந்தோஷமும், நிம்மதியும் அடைவானாகில், அதைப்போன்றே மற்றவனிடம் நடந்தால், அதே நல்லொழுக்கத்தின் பாற்பட்டதாகும்.
('விடுதலை' 21.3.1956)
No comments:
Post a Comment