புதுடில்லி, நவ.28 மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள விவசாய சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் நடத்தும் ‘டில்லி சலோ' (டில்லி செல்வோம்) போராட்டம் தீவிரம் அடைந் துள்ளதால், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின் றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா உள் ளிட்ட மாநில விவசாயிகள் டில்லியில் போராட்டத்துக்காக குவிந்துள்ளனர். ‘டில்லி சலோ' என்ற பெயரில் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
தற்போது டில்லியை நோக்கி செல்லும் அவர்களை அரியானா மாநில எல்லையில், அனுமதிப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில், விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் அனைத்து பிரச்சினை தொடர்பாகவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றும், ‘புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இந்த சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு விவசாய சங்கத்தின ருடன் ஏற்கெனவே பேசி வருகிறது. வரும் 3- ஆம் தேதி இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். எனவே, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment