அவரின் தொண்டறத்தை நினைவுகூர்ந்து தமிழர் தலைவர் நெகிழ்ச்சி!
சென்னை, நவ. 29- வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம், மருத்துவர் சியாம் சுந்தர் நினைவு அறக்கட்டளையை அறிவித்து, அறக்கட்டளைக்கு ரூ. ஒரு லட்சம் தொகை யையும் அளிப்பதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
வரியியல் அறிஞரும், பெரியார் மணியம்மை அறக் கட்டளையின் தலைவருமான ச.இராசரத்தினம் (வயது 92) 18.7.2020 அன்று மறைவுற்றார். அவர் மறை வைத் தொடர்ந்து, அவர் மகன் மருத்துவர் சியாம் சுந்தர் 29.7.2020 அன்று மறைவுற்றார். இருவரின் நினைவைப் போற்றும் வகையில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் (நிகர் நிலை பல்கலைக்கழகம்) சார்பில் படத் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று (28.11.2020) காலை சென்னை பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் (நிகர் நிலை பல்கலைக்கழகம்) வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் வரியியல் அறிஞர் ச.இராச ரத்தினம் அவர்கள் குறித்த ஆவணப் படம் பெரியார் வலைக்காட்சி சார்பில் திரையிடப்பட்டது.
ஆடிட்டர் இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றி, நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் மற்றும் டாக்டர் சியாம் சுந்தர் இருவரின் படங்களையும் திறந்துவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலுமூலம் அறிமுகமானவர், பல்கலை கொள்கலன், மனிதநேயர், நேர்மையாளர், 35ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கத் தில் உள்ளவர், மூத்த சகோதரராகவே இருந்து தகுந்த ஆலோ சனைகளை வழங்கி வந்தவர் வரியியல் அறிஞர் ச.இராச ரத்தினம் என்றும், பெரியார் அறக் கட்டளை, பல்கலைக் கழகம், கல்வி நிறுவனங்கள், இயக்க வளர்ச்சி என அனைத்திலும் தமது பங்க ளிப்பை வழங்கிவந்தவர் என்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தமது உரையில் குறிப்பிட்டார்.
வருமான வரி தலைமை ஆணையர் ராஜீப் குமார் கோட்டா, வருமான வரி ஆணையர் அருண் பரத், வழக்குரைஞர் ஜி.பாஸ்கர், ஆர்.சிவக்குமார், எம்.கந்த சாமி, மருத்துவர் கே.பிரேம்ராஜ், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.மல்லிகா, பெரியார் வீரவிளையாட்டுக்கழகத் தலைவர் ப.சுப்பிரமணியம், ஆடிட்டர் பி.கே.மூர்த்தி, பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், ஆடிட்டர் ஜி.சுப்பிரமணியம், அய்.சி.ஏ. மேனாள் தலைவர் ஆடிட்டர் பூபதி, மருத்துவர் பிரேமா, இராசரத்தினம் அவர்களின் சகோதரி மருத்துவர் ஞானசவுந்தரி, இராசரத்தினம் அவர்களின் மைத்துனர் மருத்துவர் ஏ.தேவதாஸ் ஆகியோர் காணொலி மூலம் படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய வர்கள் வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் மற்றும் டாக்டர் சியாம் சுந்தர் ஆகிய இருவருடனான தங்க ளின் அனுபவங்களை நினைவுகூர்ந்தனர். இவ்விரு வரின் மறைவு அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டு மல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே பேரிழப்பாக ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்கள்.
இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய உறவி னர்கள், நண்பர்கள் அனைவரும், இந்நிகழ்வின்மூலம் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், மருத்துவர் சியாம்சுந்தர் ஆகியோருக்கு சிறப்பு சேர்த்தமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்திற்கும், ஆடிட்டர் இராமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண் டனர்.
காணொலியில் பலரும் உரையாற்றியதைத் தொடர்ந்து, படத்திறப்பு நிகழ்வில் மருத்துவர் ஏ.இராஜ சேகரன், பேராசிரியர் எஸ்தேவதாஸ், திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் நிறைவுரையாற்றினார் .
இந்நிகழ்வில் மோகனா வீரமணி, பல்கலைக் கழக மாமன்ற உறுப்பினர் வீ.அன்புராஜ், மோகன், கலா மோகன் மற்றும் இராசரத்தினம் அவர்களின் குடும் பத்தினர், உஷா நாராயணன், ரமேஷ், கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மருத் துவர் மீனாம்பாள், வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், ப.சுப்பிரமணியம், த.க..நடராசன், வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங், சுதா அன்பு ராஜ், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே அரங்கில் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நேரிலும், காணொலியிலும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவர் வாணி சியாம் சுந்தர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment