நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 1, 2020

நன்கொடைகள்

முன்னாள் மாவட்ட ப.க. அமைப்பாளர் ச.கந்தசாமி அவர்களது சகோதரர்  ச.சவுண்டையன் - சாந்தி இணையரது மகள் ச.மோகனப் பிரியா, கமுதி சோ.பூபதி - நீலாவதி இணையரது மகன் பூ.தினேஷ்பாபு இவர்களது மணவிழா 29.10.2020 வியாழன் காலை 11 மணிக்கு, அருப்புக்கோட்டை கே.சி.மகாலில் நடைபெற்றது. மாநில ப.க. துணைத்தலைவர் கா.நல்லதம்பி, மாவட்ட கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், நகர கழகச் செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞர ணித் தலைவர் க.திருவள்ளுவர் மற்றும் தோழர்கள், உற்றார் உறவினர்கள் மணவிழாவில் பங்கேற்றனர். மணவிழா மகிழ் வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500, அருப்புக்« காட்டை தந்தை பெரியார் படிப்பக நிதி ரூ.500 நன்கொடை வழங் கினர். வாழ்த்துகள்.


- - - - -


அருப்புக்கோட்டை முன்னாள் நகர கழகச் செயலாளர் க.சதாசிவம் அவர்களது சகோதரர் க.பிரபாகரன் - கீதா இணையரது மகன் பி.பாலாஜி, சென்னை ரா.பாலு - சித்ரா இணையரது மகள் பா.பூஜிதா (எ) சரண்யா இவர்களது மணவிழா 30.10.2020 வெள்ளி காலை 10 மணிக்கு, அருப்புக் கோட்டை கரும்புலியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500, அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதி ரூ.500 நன்கொடை மாவட்ட கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவனிடம் வழங்கினர். வாழ்த்துகள்.


No comments:

Post a Comment