ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 13, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:



  • அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளும் கட்சி அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய மாநிலங்கள் பேரவையை உருவாக்கி, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆலோசகர் சஞ்வான் சாக்னி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • இணையத்தில் வரும் செய்தித்தளங்கள், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், போன்ற ஓடிடி (OTT) தளங் களும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கட்டுப் பாட்டின் கீழ் செல்கின்றன. இதற்கான ஒப்புதலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை இணையத்தில் வரும் செய்திகளைக் கட்டுப்படுத்த சட்டம் இல்லாமலிருந்தது. ஆனால், கட்டுப்பாடு என்ற பெயரில் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும்வகையில் அரசின் நடவடிக்கை இருக்கக் கூடாது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:



  • பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி, ஏமாற்றி வென்றுள்ளார்கள் என ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார்.

  • காங்கிரஸ் தேர்தலில் மோசமான தோல்வியடைந்து, மகாபந்தன் ஆட்சிக்கு வருவதை தடுத்து விட்டது என அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் கூறியுள்ளார்.

  • பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக வருகிற 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு ரத்து செய்தது. பள்ளி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், சமுதாய, அரசியல், கலாச்சார நிகழ்வு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 100 பேருக்கு மிகாமல் 16ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப் பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவத்தில் எழுத்தாளர் அருந் ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் காம்ரேட்ஸ்’ என்ற பாடப்புத்தகம் சேர்க்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், ஏபிவிபி மாணவர் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் துணவேந்தர் திடீரென நீக்கியதை கல்வியாளர் கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • பீகார் தேர்தலில் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) பல இடங்களில் தோல்வியடைந்ததற்கு, சிராக் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிதான் காரணம். அக்கட்சியை, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

  • பொருளாதாரத்தை மீட்க மோடி அரசு எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை. பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக தருவதில் அக்கறை காட்டுகிறது. இது மக்களை திசை திருப்பும் செயல் என மத்திய நிதி அமைச்சர் கூறியுள்ள சலுகை திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்கு அமைக்கப் பட்டுள்ள அறக்கட்டளை சட்ட விரோதமானது என நிர்வானி அக்கார அமைப்பின் தலைவர் மகந்த் தாஸ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


குடந்தை கருணா


13.11.2020


No comments:

Post a Comment