ராஜ்கோட், நவ. 29- குஜராத் மாநிலம் ராஜ்காட் பகுதியில் உள்ள கரோனா மருத்துவ மனையில் திடீர் தீவிபத்து ஏற் பட்டது. இதில், 5 நோயாளி கள் இறந்துள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதி மாவ்டி பகுதியில் உள்ளது உதே சிவானந்த் மருத்துவமனை. தற்போது, இந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த மருத் துவமனையில் உள்ள அய்சியு பிரிவில் நள்ளிரவு 1 மணி அள வில் திடீர் தீ விபத்து ஏற் பட்டுள்ளது. இதையடுத்து, தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்ட மருத்துவ பணி யாளர்கள், மற்ற வார்டுகளில் உள்ள நோயாளிகளையும் வெளியேற்றும் பணியில் ஈடு பட்டனர்.
இந்த விபத்தின்போது, 33 பேர் மருத்துவனையில் இருந் ததாக தெரிகிறது. அய்சியுவில் மட்டும் 11 பேர் இருந்த நிலை யில், அவர்களை உடனே மீட்க முடியாத நிலையில், தீ மளமளவென பரவியதால், 5 நோயாளிகள் தீயில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. 3 பேர் அய்சியுக்குள்ளே இறந்த தாகவும், 2 பேர் வெளியேற் றப்பட்ட நிலையில் இறந்து உள்ளதாகவும், மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீய ணைப்பு வீரர்கள், மருத்துவ மனை முழுவதும் தீ பரவுவ தற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த திடீர் தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உத் தர விட்டுள்ளார்.
No comments:
Post a Comment