திருவிடைமருதூர் திராவிடர் கழக முன்னாள் ஒன்றிய துணைத் தலைவரும் சட்ட எரிப்பு வீரருமான பெரியார் பெருந்தொண்டர் கல்யாணபுரம் கே.எஸ்.பிச்சமுத்துவின் முதலாமாண்டு வீரவணக்க நிகழ்ச்சி 24-11-2020 மதியம் 12:30 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் கே.எஸ்.பிச்சமுத்துவின் படத்திற்கு மரியாதை செலுத்தி திராவிடர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராசு ஆகியோர் உரையாற்றினார், கிளைக் கழக தலைவர் காமராஜ் நன்றி தெரிவித்தார். திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் எம்.என். கணேசன், ஒன்றிய செயலாளர் நா.முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சங்கர், பெரியார் பெருந்தொண்டர் ஜோதி, சிவக் குமார், திலீபன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.அரவிந்த் மற்றும் திராவிடர் கழக பொறுப்பாளர்கள், குடும்பத்தினர்கள் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment