இறப்பு, இரட்டை பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

இறப்பு, இரட்டை பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்

தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


சென்னை, நவ.14 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று (13.11.2020) அளித்த பேட்டி வருமாறு: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.


வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக இடம் மாறினால், இறந்தால் மற்றும் இரட்டை பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்படுகிறார்கள். கரோனாவில் இறந்தாலும், பொதுவாக இறந்தவர்களுக்கு உள்ள விதியான விண்ணப்ப படிவம் 7 பெற்றுதான் நீக்கப்படுகிறார்கள். மேலும், பூத்துகளில் நீக்கப்பட்டவர்களின் பட்டியல் இருக்கும். அரசியல் கட்சியினர் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட உள்ளனர். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஜனவரி மாதம் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


No comments:

Post a Comment