அந்தோ, சிங்கப்பூரின் முதுபெரும் பெரியார் தொண்டர் நகைச்சுவை நடிகர் ஆரூர். சபாபதி மறைந்தாரே! அவருக்கு நமது வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 1, 2020

அந்தோ, சிங்கப்பூரின் முதுபெரும் பெரியார் தொண்டர் நகைச்சுவை நடிகர் ஆரூர். சபாபதி மறைந்தாரே! அவருக்கு நமது வீர வணக்கம்


ஆரூர் சபாபதி என்ற பெயரில் சிங்கப்பூர் நாட்டின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்


88 வயதான அருமைத் தோழர் மானமிகு சபாபதி அவர்கள் - சிறந்த நாடறிந்த நகைச்சுவை நடிகரும்கூட!


என்றும் சிரித்த முகத்தோடு எவரிடமும் பான்மையுடன் பழ கிடும் பண்பாளர் - பகுத்தறிவாளர்.


தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா,  கலைஞர் மற்றும் நம்மிடமும் மாறாத பற்று கொண்ட மகத்தான மறக்க முடியாத தோழர் ஆவார்!


சிங்கப்பூரில் அடிநாளில் திராவிடர் கழகத்தை நடத்திய தோழர்களுடன் கலந்து பணியாற்றிய களப் பணியாளர்களில் கடைசியாக எஞ்சியிருந்த பெரியவர்.


அவர் உடல் நலம் குன்றி அவரது மகள் வீட்டில் டேம்பினிஸ்  (Tampanies)  பகுதியில் வசித்து வந்த நிலையில், 10 நாள்களுக்கு முன்பு சிங்கப்பூர் நண்பர் எம்.இலியாஸ் ஆசிரியராக இருந்து நடத்தி வரும்  ‘செம்மொழி' ஏட்டின் சார்பில்  வி. ராமச்சந்திரன் பேட்டி கண்ட போது, என்னுடன் அவர் பேச, காண தொடர்பு ஏற்படுத்தித் தந்தார். மகிழ்ச்சி யுடன் வாழ்த்தினோம்.


அவரது பேட்டியை ('செம்மொழி' ஏட்டில் வந்தது) ‘விடுதலை' சென்ற ஞாயிறு மலரிலும் வெளியிட்டு மகிழ்ந்தோம்.


அவர் இன்று (1.11.2020) அதிகாலை அவரது மகள் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தோம்!


அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் தெரிவிக்கின்றோம்.


முதுமையில் அவரது வாழ்விணையர் திருமதி சகுந்தலா மறைந்த பிறகு, அவரை நன்கு பராமரித்த அவரது மகள், மருமகன் குடும்பத்தாருக்கும் நமது பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.


மறைந்தார் என்பதைவிட நம் நெஞ்சில் நிறைந்தார். அந்த லட்சிய வீரருக்கு நமது வீர வணக்கம்!


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை       


1.11.2020           


No comments:

Post a Comment