ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 29, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:



  • மோடி அரசின் தனியார்மயமாக்கலை தான் எதிர்ப்பதால், பாஜக தன்மீது தாக்குதலை நடத்துகிறது. டில்லிக்கு நாங்கள் அடிமைகள் அல்ல என்கிறார் டி.ஆர்.எஸ்.கட்சியின் தலைவரும், தெலுங்கான மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ்.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:



  • மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி சலோ என்று பேரணி நடத்தும் பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மாநில விவசாயிகள் டில்லி எல்லையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தெற்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட இடத் திற்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

  • ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்பது நமது முழக்கம். ஆனால், மோடி அரசில் விவசாயிகளுக்கு எதிராக ராணுவத்தை துப்பாக்கியோடு நிறுத்தியுள்ளது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • உ.பி. யோகி அரசு கொண்டு வந்துள்ள மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்கும் சட்டத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

  • வணிக வளர்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிடும். வேலையின்மையை அதிகரிக்கும். வெளி நாட்டில் முதலீடு செய்திட ஊக்கப்படுத்தும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • வீரசைவ லிங்காயத்துகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பது குறித்து, முதலில் கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் அறிக்கைப் பெற்று, பிறகு முடிவு செய்ய வேண்டும் என்பதை கர்நாடக அரசு அறிந்திருக்க வில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.


தி டெலிகிராப்:



  • வாரணாசி வரும் பிரதமர் மோடியை வரவேற்க கங்கை நதியோரம், விளக்குகளை ஏற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


தி இந்து:



  • ஹிந்து மதத்தில், பார்ப்பனர்களுக்கு ஒரு தர்மமும், சூத்திரர்களுக்கு ஒரு தர்மமும் உள்ளது. ஹிந்து மதத்தில் ஒருமித்த நம்பிக்கை சார்ந்து இயங்கவில்லை. ஏனெனில், சாதி அடையாளம் தான் ஹிந்து அடையாளம் என ‘நான் ஏன் ஹிந்து பெண்மணி அல்ல’ என்ற நூலில் பேராசிரியர் வந்தனா சோனால்கர் குறிப்பிட்டுள்ளார்.

  • நீதித்துறையின் சுதந்திரம் சிதைந்து விட்டது. தற்போதைய மோடி அரசு, தலைமை நீதிபதிகள் நியமனத்திற்கு முன்பாகவே அவர்களைப் பற்றிய குறிப்புகளை தயார் செய்து விடுகிறது என மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.


பி.பி.சி. நியூஸ் தமிழ்:


உத்தரப் பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம், 2020 என்கிற இந்தச் சட்டத்துக்கு, உத்தரப் பிரதேச ஆளுநர் அனுமதி கொடுத்து இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.


குடந்தை கருணா


29.11.2020


No comments:

Post a Comment