மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட ப.க தலைவர் ஞான. வள்ளுவன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முதல் தவணையாக 21 விடுதலை சந்தா, 5 உண்மை சந்தா , ஒரு மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தா வழங்கினர். உடன்: மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி , திமுக மாவட்ட துணைச் செயலாளர் செம்பனார் கோயில் மு.ஞானவேலன், கடவாசல் சந்திரசேகரன், சீர்காழி ஒன்றியத் தலைவர் செல்வம், செம்பனார் கோயில் திமுக கிளைச் செயலாளர் பாண்டியன், (திமுக) ரமேஷ், ராஜாராமன், பாலா. திராவிடர் கழகக் காப்பாளர் சீர்காழி எஸ்.எம்.ஜெகதீசன் - பொதுக்குழு உறுப்பினர் வசந்தா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், சீர்காழி நகரத் தலைவர் சபாபதி ஒரு விடுதலை சந்தாவையும், சீர்காழி பக தலைவர் கோ. சட்டநாதன் ஒரு விடுதலை சந்தாவையும், வைத்தீசுவரன்கோயில் ஓய்வூதியர் சங்க செயலர் மு.கருணாநிதி ஒரு விடுதலை சந்தாவையும், குத்தாலம் ஒன்றிய கழக தலைவர் கொக்கூர் முருகையன் ஒரு விடுதலை சந்தாவையும், கோமல் பள்ளி தலைமை ஆசிரியர் செழியன் இரண்டு விடுதலை சந்தாவையும், மயிலாடுதுறை மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரனிடம் வழங்கினர். ஞான. வள்ளுவனிடம் வைத்தீசுவரன்கோயில் நகர கழக தலைவர் வி.ஆர்.முத்தையன் ஒரு விடுதலை சந்தாவை வழங்கினர். உடன்: ஆண்டவர் டிராவல்ஸ் உரிமையாளர் திமுக வீரமணி, கவிஞர் வெண்மணிஅழகர்
திராவிடர் கழக காரைக்கால் மண்டலச் செயலாளர் குரு. கிருஷ்ணமூர்த்தி, அனிதாராஜீ, அகிலா, தமிழ் ஆகியோர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 12 சந்தாக்களை வழங்கினர். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், பொதுக்குழு உறுப்பினர் பொன். பன்னீர்செல்வம், காரைக்கால் மண்டல இளைஞரணி செயலாளர் பெரியார் கணபதி, மாணவர் கழக செயலாளர் மோகன்ராஜ் உடனிருந்தனர். திராவிடர் கழக காரைக்கால் மண்டல துணைச் செயலாளர் ரெ.ஜெயபாலன் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஜெயபாலன் - சந்திரா இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒரு விடுதலை சந்தாவை வழங்கினர்.
குடவாசல் ஒன்றியச் செயலாளர் சி.அம்பேத்கர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை சந்தா வழங்கினார். நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவரது இணையர் செல்வி, தாயார் பிரனாம்பாள் (72) ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை சந்தா வழங்கினர். அப்போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரனாம்பாள் அம்மையாரிடம் நலம் விசாரித்தார். உடன், மாவட்டச் செயலாளர் புபேஷ் குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட மாணவரணி செயலாளர் மு.குட்டிமணி.
மனிதநேய மக்கள் கட்சி நாகை மாவட்ட செயலாளர் கல்லார் இரஃபிக் ஒரு விடுதலை சந்தாவையும், வி.சி.க நாகை மாவட்ட துணைச் செயலாளர் அரா.பேரறிவாளன் ஒரு விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்டச் செயலாளர் புபேஷ் குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட மாணவரணி செயலாளர் மு.குட்டிமணி.
திருவாரூர் ஆசிரியர் முனியாண்டி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் 1 ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். அப்போது, மாநில விவசாயத் தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாவட்டத் தலைவர் வி.மோகன். மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட ப.க தலைவர் இரா.சிவகுமார் உடனிருந்தனர்.
காரைக்குடி தேவகோட்டை மருத்துவர் சு.தமிழரசன் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவை மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறையிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment