மனித உரிமைச் செயல்பாட்டாளர் வெர்கரா பெரெஸ் "நான்சென் புலம் பெயர்ந்தோருக்கான 2020 ஆம் ஆண்டு" விருதைப் பெற்றார்.
தென் அமெரிக்க நாடான கொலம் பியாவில் கொத்தடிமைகளாக உள்ள கடத் தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் போன்றவர்களுக்குக் கல்வி அளித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவை செய்துவரும் கல்வியாளர் வெர் கரா பெரெஸுக்கு இந்த ஆண்டிற்கான நான்சென் புலம்பெயர்ந்தோருக்கான விருதை அக்டோபர் முதல் நாள் அய்.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் அறிவித்தார்.
கொலம்பியாவில் கொள்ளைக்காரர் கள் மற்றும் போதைமருந்து கடத்தல் காரர்களால் பல சிறார்கள் கடத்தப்படு கின்றனர். இவ்வாறு கடத்தப்படும் சிறார் களை மீட்டு அவர்களின் வாழ்வா தாரத்தை மீட்க, உதவுவதற்கான ரெனாள் சேவை நிறுவன அறக்கட்டளையின் கரிபியன் பகுதி ஒருங்கிணைப்பாளர் வெர்கரா பெரெஸ் கடுமையாக உழைத்து உள்ளார்.
இது தொடர்பாக அய்.நா. புலம்பெயர் மக்களுக்கான அதிகாரி பிலிப்போ கிரண்டி கூறும் போது “மிகவும் பாதிக் கப்பட்ட துன்பத்திற்கு ஆளான சிறார் களை மீட்பதற்குத் துணிச்சலும் அர்ப் பணிப்பு எண்ணமும் வேண்டும். திருமதி வெர்கரா பெரெஸ் கடந்த 20 ஆண்டு களாக கொலம்பியா முழுவதும் பயணம் செய்துள்ளார். எங்கெல்லாம் சிறார்கள் கொத்தடிமைகளாகப் போதை மருந்து கடத்தல்காரர்களிடம் சிக்கி உள்ளார் களோ அங்கெல்லாம் சென்று பயப்படா மல் சிறார்களை மீட்டு வந்துள்ளார். 32 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரெனாள் அறக்கட்டளை நிறுவனம் கொத் தடிமை மற்றும் பல்வேறு தளங்களில் சித் திரவதைகளை அனுபவித்த குழந்தைக ளையும், அவர்களிடமிருந்து தப்பிய குழந்தைகளையும் மீட்டுள்ளார். இவர் களால் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இது மிகவும் சேவை உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே செய்யும் செயலாகும்.
நான்சேன் 2020 விருதைப் பெற்ற வெர்கரா பெரெஸ் கொலம்பிய அரசின் குடும்ப நலத்துறை மற்றும் அரசு சார்ந்த குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து சேவையாற்றி வருகிறார்.
2008 ஆம் ஆண்டு வெர்கரா பெரெஸ் நடத்திய கடுமையான போராட்டம் இரண்டு முக்கிய சட்டங்களை இயற்றக் காரணமாக இருந்தது. பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் மற்றும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தவோ, அவர்கள்மீது பாலியல் வன்கொடு மையோ செய்யும் உரிமையாளர்களுக்குச் சிறைத்தண்டனை பெற்றுத்தரும் சட் டத்தை நிறை வேற்றப் போராடினார். உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் கடத்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதில் சிறார்கள் மற்றும் பெண்கள் அதிகம் உள் ளனர் என்று அய்க்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
2015-ஆம் ஆண்டு 1.7மில்லியன் மக்கள் வெனிசுலாவிலிருந்து அண்டை நாடான கொலம்பியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். இதில் பலர் ஆயுதக் கும்ப லின் பிடியில் சிக்கினர், சிலர் மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியுள் ளனர். அதே போல் போதைமருந்து கடத் தல் கும்பலாலும் பலர் கடத்தப்பட்டுள் ளனர். நான்சென் புலப்பெயர்ந்தோர் விருது "புலம்பெயர்ந்த மக்களின் நல வாழ்விற்காகப் பாடுபட்டு வருபவர்க ளுக்கு வழங்கப்பட்டு வருகிறது, இன்று வரை 82 நபர்களுக்கும்" புலம்பெயர்ந் தோருக்கான சேவை அமைப்புகளுக்கும் நான்சென் விருது வழங்கப் பட்டுள்ளது. $100,000 மதிப்புள்ள தொகையோடு நான் சென் பதக்கத்தையும் நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பகிர்ந்து அளிக்கின்றன .
No comments:
Post a Comment