சென்னை, நவ.14 அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதாக கூறி, சூரப்பா மீது விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு நேற்று (13.11.2020) அதிரடி உத்தரவை பிறப்பித் துள்ளது. இந்த உத்தரவை தமிழக உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா பிறப்பித்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது: திருச்சியில் இருந்து சுரேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி முதல்வர் தனி பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். அதில், அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குநர் சக்திநாதன் மற்றும் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் அரசு நிதியில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் தலா ரூ.13 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.80 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றுள் ளனர் என்று கூறப்பட்டிருந்தது. சி.வரத ராஜன் என்பவரிடம் இருந்து வந்த புகார் மனுவில், அலுவலக உதவியாளர் பதவி உயர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளுக்கு முக்கிய பதவி
அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு என்ற அமைப்பில் இருந்து வந்த இ-மெயில் மனுவில், பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் செல்லத் துரை என்பவரை கூடுதல் பதிவாளராக வும், இயக்குனராகவும் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எதுவும் நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக தவறான தகவலை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். ஆதிகேசவன் என்பவரிடம் இருந்து வந்த புகார் மனுவில், துணைவேந்தர் சூரப்பா தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு வேலை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி களுக்கு தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடுகள் செய்துள்ளார். நிதி, முறைகேடுகளையும் தாண்டி செமஸ்டர் தேர்வுகளிலும் மறுமதிப்பீட்டிலும் பல் வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதை கண்டறிய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சூரப்பா பணி காலத்தில் நடந்த முறை கேடுகள் குறித்து விசாரணை நடத்தும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்கப்படும்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி....
சூரப்பா பணிக் காலத்தில், அதி காரத்தை தவறாக பயன்படுத்தி பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள் நடந்துள் ளனவா, அதில் பங்கு கொண்டவர்கள் யார், யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணை காலத் தில், விசாரணை அதிகாரி தேவைப் பட்டால் இதற்கு முந்திய காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தின் மீது புகார் கூறப் பட்டிருந்தாலும் விசாரிக்கலாம். எதிர் காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதற்காக இந்த விசா ரணைக்கு உத்தரவிடப்படுகிறது.
விசாரணை அதிகாரி தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் விசாரணை நிறுவனங்களை பயன்படுத்த அதிகாரம் வழங்கப்படுகிறது. தேவையான அலுவலக வசதிகளும் செய்து தரப்படும். விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் அர சிடம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment