இங்கிலாந்தில் 1827இல் தொடங் கப்பட்டது உல்வராம்ப்டன் பல் கலைக் கழகம். அங்கு தத்துவம், பண்பாட்டு அரசியல் துறையில் பஞ்சாபிலிருந்து அங்கு சென்ற மீனா தகாண்டா எனும் பேராசிரியர் பணிபுரிந்து வருகிறார். அவர் தலைமையில் நேற்று (11.11.2020) ஓர் உலகக் கருத்தரங்கு நடைபெற்றது. "ஜாதியிலிருந்து விடுதலை - உலக அரங்கிற்கு பெரியார் ஈ.வெ.ராம சாமி அவர்களின் அரசியல் கருத் துகள்" என்ற தலைப்பில் பல்துறை அறிஞர்கள் பேசினர்.
மேரி சுகோளோடவுசுகா கூரி செயல்பாட்டின் இரண்டாண்டு சிறப்பு ஆராய்ச்சியாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள முனைவர் கார்த்திக் ராம் மனோகரன் இதை ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஆராய்ச்சி இரண்டு ஆண்டுகள் நடைபெறும் திராவிடர் கழகம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட 37 தொகுதி கள் கொண்ட "பெரியார் களஞ்சியம்" பற்றியது ஆகும். இந்த ஆராய்ச்சி 2022இல் முடியும்.
மிசியால் பார்த்தான் என்ற பல் கலைக் கழக ஆளுநர் தொடக்க உரையாற்றி மனித நேயத்தின் முக்கியம் பற்றி, சமத்துவம், சுய மரியாதை பற்றிப் பேசினார் .
அமெரிக்க மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக உள்ள முனைவர் ராம் மகாலிங்கம் அவர்கள் மனித உள்ளங்கள் - அதில் ஏற்றத் தாழ்வுகள், அதன் அடிப்படை - போக்கும் வழிகள் என்று பல ஆராய்ச்சிகள் மற்றும் செய்து பயிற்சிகளும் அளித்து வரு கின்றார். அவர் பெரியார் அவர்க ளது ஜாதி ஒழிப்பின் அடிப்படை, சுயமரியாதை, அதைத் தடுக்கும் பார்ப்பனீய சக்திகள் பற்றி எடுத்து ரைத்தார் .
ஹார்வேர்டில் ஆராய்ச்சியாள ராக உள்ள மிகவும் புகழ் பெற்ற சூரஜ் எங்டே ஜாதி பற்றியும், அம் பேத்கர் குறித்த ஆராய்ச்சி நூலும் எழுதி புகழ் பெற்றவர். அவர் பெரியாரின் அணுகுமுறை, பார்ப் பனீய எதிர்ப்பு ஏன் என்பது பற்றி யும், அவரது தமிழ்நாட்டுப் பயணங் கள் பற்றியும், மூலைக்கு ஒரு கோவில் ஏன் என்பது பற்றியும் பேசினார் .
ஆராய்ச்சியாளர் கார்த்திக் ராம் மனோகரன் தமிழில் "சுயமரியாதை" என்பதை ஏன் பெரியார் சொன் னார், அவரை ஆராய்ந்து உலகிற்கு கொண்டுவர அவர் ஏன் பெரியார் களஞ்சியங்களைத் தேர்ந்தெடுத் தார் என்றும் விளக்கமாகச் சொன் னார்.
கேள்வி-பதிலில் பல்துறை உலக அறிஞர்கள் கலந்து கொண்டனர். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற பொய்யான கருத்துகளை மறுத்து தக்க விளக்கங்களுடன் எடுத்து ரைத்தனர். காந்தியாருடன் அவருக் கிருந்த மதிப்பும், கருத்து வேறு பாடும் அலசப்பட்டது. வருங்காலத் தில் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கின் முழு ஒளிப்பதிவும் விரைவில் வரும்.
மருத்துவர் சோம.இளங்கோவன், சிகாகோ, அமெரிக்கா
No comments:
Post a Comment