தேசம் நன்மையடைய வேண்டுமானால், மத வுரிமை, ஜாதி உரிமை, பழக்க வழக்கம் என்பவற்றை யெல்லாம் மூட்டைக்கட்டி அட்லாண்டிக் பெருங் கடலில் போட்டுவிட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத்தகைய அரசியல் சீர்திருத்தம் வருவதாயிருந்தால்தான் சுயமரியாதைக்காரர்கள். அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதிகர்கள் விரும்புகின்றபடியும், காங்கிரஸ்காரர்கள் கேட்கின்ற படியும், மதபாதுகாப்புள்ள சீர்திருத்தம் எது வந்தாலும் அவைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரிக்கத் தகுதி யுடையனவா?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 19.6.1932
‘மணியோசை’
No comments:
Post a Comment