வடமணப்பாக்கம், நவ. 1- செய்யாறு கழக மாவட்டம், வடமணப்பாக்கம் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும், நினைவில் வாழும் நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன்-வேத வள்ளி ஆகியோர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் காணொலிக் கூட்டம் 9.10.2020 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்து பேசினார். செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் அனைவரை யும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, வேலூர் மண்டல திராவிடர் கழக தலைவர் குடியாத்தம் வி.சடகோபன், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், செய்யாறு நகர திராவிடர் கழக தலை வர் தி.காமராசன், ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற் றினர். சென்னை, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவாளர் முனைவர் மு.தமிழ்மொழி இணைப்புரை வழங்கினார்.
‘மனித வாழ்வில் பெருமை எது' என்ற தலைப்பில் கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனை வர் அதிரடி க.அன்பழகன் பேசுகையில்: உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்து போனாலும் - தந்தை பெரியார் போன்று ஒரு சுய சிந்தனையாளர், பெண்ணினத்திற்காக போராடியவர், சமூக நீதியை வென்றெடுத்தவர், மூடநம்பிக்கைகளை ஒழிக்க முற்பட்டவர், அடிமைத் தனத்தை அகற்றிய வர் வேறு ஒருவருமில்லை என்றும், இன்றளவும் பேசக்கூடிய தலைவராக விளங்குகிறார் என்றும், தொண்டறம் என்ற வார்த்தையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நம்மிடம் அறிமுகப்படுத்தியதை மனித வாழ்வில் அதைப் பின்பற்றி ஒழுக வேண்டும் - மனித வாழ்வில் பெருமை இதுதான் என்றும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.
முடிவில் வி.தேவகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment