நகைச்சுவை அரசராக திரைப்படங்களில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓர் அமைதியான அறிவுப்புரட்சி செய்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று!
கலைவாணர் வழமையான கல்வி பெறாதவர்; ஆனால், பச்சை அட்டை ‘குடிஅரசு' தான் அவருக்குப் பாட ஆசான்!
ஒவ்வொரு நகைச்சுவைத் துணுக்கும் ஜாதியை, மூடநம்பிக்கையைச் சாடும் வெடிகுண்டுகளாக அந்நாளில் பரப்பியவர். சிரிக்க வைத்தும், சிந்திக்க வைத்தும் மக்களை சீர்திருத்திய மேதை!
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களிடம் அவரும், அவரது இணையர் டி.ஏ.மதுரமும் காட்டிய கொள்கை உறவு போற்றத்தகுந்தது - வரலாற்றில் நிலைத்தவை!
அவர் என்றும் வாழும் கருத்துப் பெட்டகம் - வெற்றிக் கலைவாணர்!
வாழ்க! வாழ்கவே!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
29.11.2020
No comments:
Post a Comment