108 வயதான ”மரங்களின் அன்னை” சாலுமரத திம்மக்காவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

108 வயதான ”மரங்களின் அன்னை” சாலுமரத திம்மக்காவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்!


கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மரங்களை நடவு செய்தவர் ராம்நகர் மாவட்டம் குளிகல் கிராமத்தை சேர்ந்த சாலுமரத திம்மக்கா. 108 வயதான இவர் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு மாபெரும் பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.


குளிகல் குதூர் இடையேயான சாலை யில் வரிசையாக ஆலமரக்கன்றுகளை நட்டு வளர்த்ததால் அவர் சாலுமரத திம் மக்கா என்று கன்னட மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். இவரின் சாத னைகளைப் பாராட்டி கர்நாடக அரசு ஏற் கெனவே கன்னட ராஜ்யோத்சவா, கன்னட ரத்னா உள்ளிட்ட விருதுகளைக் கொடுத்துக் சிறப்பித்துள்ளது. இந்தியாவின் சிறந்த தேசிய குடிமகள் விருதினை ஏற்கனவே பெற்ற இவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்டது.


இவரின் விருதுகளுக்கெல்லாம் மணி மகுடம் சேர்ப்பது போன்று மதிப்புறு முனை வர் பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளது கர்நாடகாவில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.எம். மல்லேஷ்வரய்யா பெங்களூருவில் உள்ள திம்மக்காவின் வீட்டிற்கே வந்து முனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். அதைப் பெற்றுக் கொண்ட அவர் சுற்றுச்சூழலுக்காகப் பாடு படும் பெண்களுக்கு இந்த பட்டத்தைக் சமர்ப்பிப்பதாக கூறினார்.


No comments:

Post a Comment