தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை,அக்.15, தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் நேற்று (14.10.2020) வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-


"கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்" என்றும்; "எந்த ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், 1000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை" என்றும்; தினமும் விவசாயிகள் அனுபவிக்கும் தீராத இன்னல்களை, அ.தி.மு.க. அரசு இது வரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.


நேரடி கொள்முதல் நிலையங் களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். அறுவடை செய்த நெல்லைச் சேமித்து வைத்து விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பும் இல்லை; வசதிகளும் இல்லை. ஆகவே அறு வடை செய்தவுடன் நேரடி கொள் முதல் நிலையங்களில் விற்றால்தான் -அவர்களின் குறைந்தபட்ச வாழ்வா தாரமாவது தப்பிக்கும் என்ற சூழலில், அதிக எண்ணிக்கையில் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் படாதது அ.தி.மு.க. ஆட்சியின் விவசாயிகள் விரோதப் போக்கிற்கான அடையாளமாகும்.


மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத் தில் உள்ள அ.தி.மு.க. அரசும், வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் பரிந் துரைத்த "உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் கூடுதல் விலை கொடுக்க வேண்டும்" என்ற எண்ணம் கூட இல் லாமல் - இந்த ஆண்டு "பெயரளவுக்கு" ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து - விவசாயிகளை மேலும் கவலைக் கிணற்றில் தள்ளி விட் டுள்ளன.


ஆகவே, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சரவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய் யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண் ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதல மைச்சர் திரு. பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.


விவசாயிகளும் - விவசாயமும்தான் தமிழகத்தைத் தாங்கி நிற்கும் முக்கியத் தூண்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து - ஏற்கெனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை செய்து - நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் கிடைக்கும் அளவிற்கு - குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திட வேண்டும்; நெல் விலையில் எந்தவிதக் கழிவும் செய்திட அனும திக்கக் கூடாது; என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment