தாழ்த்தப்பட்டோர் நிலை?
தாழ்த்தப்பட்ட தோழர் களை தங்களுக்கு ஆள் பலத் துக்காக சேர்க்கும் ஒரு யுக்தி யைத்தான் சங் பரிவார்கள் செய்துவருகிறார்கள். குஜராத்தில் வன்முறைக்கு மலைவாழ் மக்களைப் பயன் படுத்திய செய்தியும் வந்த துண்டு. அவர்களின் வறுமை தான் இவர்களின் ஆயுதம்! தமிழ்நாட்டில்கூட தாழ்த்தப் பட்டோர் பகுதிகளில் பெரும் பாலும் விநாயகர் பிரதிஷ்டை செய்வது எல்லாம் ஆள் பலத்துக்குத்தான் - பக்தியைப் பயன்படுத்தும் நயவஞ்சகம் தான்!
பல வகைகளிலும் ஏமாற் றப்பட்ட - வஞ்சிக்கப்பட்ட - சூது வாது அறியாத நமது சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசிய மாகும்.
பூரி ஜெகந்நாதர் கோவிலில் கிறித்தவரான மவுண்ட் பேட் டனை அனுமதித்த கோவில் நிர்வாகம், அண்ணல் அம்பேத் கரைத் தடுத்ததை நினைத்துப் பார்க்கவேண்டும்! வெகுதூரம் போவானேன்? இந்தியாவின் முதல் குடிமகன் - முப் படை களுக்கும் தலைவராக இருக்கக் கூடிய குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவர்தம் குடும் பத்தினரும் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் நுழைய விடா மல் (16.3.2018) தடுக்கப்பட்டதும், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரும், குடும்பத்தினரும் தடுக்கப்பட்டதும் (15.5.2018) எந்த அடிப்படையில்? தாழ்த் தப்பட்டவர்கள் இந்துக்கள் என்றால், குடியரசுத் தலைவரை யும், குடும்பத்தினரையும் தடுத்து இருக்க முடியுமா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவி யில் அமர்த்துவதும்கூட ஒரு வகை அரசியல் யுக்திதான். குறிப்பாக வட மாநிலங்களில் நாளும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அவமதிப்பு நடைபெற்று வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை யில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்களை மதிப்பிடுவதிலும், உள் மதிப்பெண்களை (Internal Marks) வழங்குவதிலும்கூட ஜாதி பாரபட்சம் காட்டப்படு கிறது என்று அம்மாணவர்கள் விசா ரணையின்போது குமுற வில்லையா?
இன்னொரு செய்தி: ராஜஸ் தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி - அப்போது உம்ராவ் சலோதியா 1978 ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். அதிகாரியாக அமர்த்தப்பட்டார். பணிமூப் பின் அடிப்படையில் தலை மைச் செயலாளராக வர அவ ருக்கு வாய்ப்பு வந்தபோது, பி.ஜே.பி. முதலமைச்சர் என்ன செய்தார்? ஏற்கெனவே தலை மைச் செயலாளராக இருந்த - உயர் ஜாதியைச் சேர்ந்த சி.எஸ்.ராஜன் என்பவரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
மனம் புழுங்கிய உம்ராவ் சலோதியா பதவியை ராஜி னாமா செய்ததுடன், நாற்றம் பிடித்த இந்து மதத்தின் ஜாதியக் கண்ணோட்டத்தின்மீது வெறுப்புக் கொண்டு இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்தார்.
அவர் ஒரு தாழ்த்தப்பட்ட அதிகாரி - இப்பொழுது புரிகிறதா பா.ஜ.க.வின் பார்ப் பனத்தனம்?
- மயிலாடன்
No comments:
Post a Comment