தந்தை பெரியார் வழங்கிய முகவுரை
சென்ற இதழ் (26.3.2020) தொடர்ச்சி...
1857 குழப்பங்களுக்குக் காரணங்களாவன:
- பிரிட்டிஷ் அரசாங்கமானது பெண்களை உடன்கட்டை ஏற்றும் சதிமுறையினைச் சட்டபூர்வமாகத் தடுத்தது
- மக்களுக்குக் கல்வி அளித்தது
- கல்லூரிகள் வைத்தது
- அடிமை முறையை அகற்றியது
5 பெண்களை விற்கும் முறையைத் தடுத்தது.
- பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்றுவிடும் பழக்கத்தைத் தடுத்தது
- பெண்களுக்குக் கல்வி கொடுத்தது
- திருமணத்தில் திருத்தம் செய்தது
- விதவைத் திருமணத்தைச் சட்டமூலம் செல்லுபடி யாக்கியது
- விவசாயம் வளர்வதற்கு மக்களைப் பலி கொடுத்து வந்ததைத் தடுத்தது
- மேல்நாட்டுக் கல்வி முறையைப் புகுத்தியது என்ப¬ வகள் முக்கிய காரணங்கள் ஆகும்.
குறிப்பு: இவைகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள பேராசிரியர்கள்: திரு. ஆர். சத்தியநாத அய்யர் எம்.ஏ., எல்.டி.,, திரு. பாலசுப்பிரமணியம் எம்.ஏ., ஆகிய வர்களை ஆசிரியராகக் கொண்ட இந்திய வரலாறு மூன்றாம் பாகத்தில் காணப்படுவனவாகும்.
மற்றும் பல சீர்திருத்தக் காரியங்களை பிரிட்டிஷ் அரசாங் கம் செய்ததாலேயே சிப்பாய்களைத் தூண்டிவிட்டுக் கலவ ரத்தை நடத்தினார்கள். அந்தக் காலத்தில் சேனையில் பார்ப் பனர்களும், முஸ்லிம்களும் ஏராளமாக இருந்ததே இக்கலக த்திற்குக் காரணமாயிருந்தது.
ஆயிரக்கணக்கான வெள்ளையர்களைக் கொன்று குவித்தவுடன் ஒரு வயோதிக முஸ்லிமை சிதம்பரத்தில் உட் கார வைத்து வெள்ளையர் ஆட்சி ஒழித்து முஸ்லிம் ஆட்சி ஏற்பட்டு விட்ட தென்று விளம்பரம் செய்தார்கள். அது சமயம் வெள்ளையர்கள் பலர் ஓடிவிட் டார்கள், பலர் மறைந்து கொண்டார்கள்.
இவை ஒரு புறமிருக்க இன்றைய நூற்றாண்டில் 1919-20 முதல் காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் நடத்திய தேசியப் போராட்டம் என்பதைப்பற்றி சிறிதும் நடுநிலைமையுடன் சிந்தித்துப் பார்த்தால் தேசிய தர்மம் என்பது என்ன என்று யாருக்கும் விளங்கும்.
1919-20 ஆம் ஆண்டில் பார்ப்பன ருக்கு செல்வாக்கு குறைந்து ஆட்சியில் ஒரு பாகம் பார்ப்பனர் அல்லாதார் (திராவிட மக்கள்) கைக்கு வந்தது. அந்த சமயத்தில் காங்கிரஸ் முழுக்க முழுக்கப் பார்ப்பனர் கைகளிலே இருந்ததால், அதை ஒழிப்பதற்காக காங்கிரஸ் கையாண்ட தர்மம், வாயில் அஹிம்சை தர்மம் நேர்மை என்றே பேசிக் கொண்டு 1835 முதல் 1920 வரை பிரிட்டிஷ் அர சாங்கம் ஆட்சியிலுள்ள எல்லா உயர்வை யும் தங்களுக்கு உள்ளதுபோக மற்ற எல்லா பெரும் பதவிகளையும் அதிகாரத் தையும், பார்ப்பனர்களுக்கே கொடுத்து வந்திருக்க, ஒரு சிலவற்றை பார்ப்பனரல் லாதார் பெறும்படி - அதுவும் தேர்தலில் வெற்றிபெற்றுப் பெறும்படி ஆனது உடன் கலவரம் குழப்பம் செய்ய ஆரம்பித்தது. 1920 முதல் 1947 வரை நாட்டில் மேலே சொன்னபடி தேசியம் என்னும் பெயரால் பதினாயிரக்கணக்கான மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்ளும்படியும், நாச வேலைகள், கட்டடம் கொளுத்துதல், சொத்துகளை நாசமாக்குதல், தண்டவா ளத்தைப் பெயர்த்து ரயில்களைக் கவிழ்த் தல், வெள்ளையர்களை கொல்லுதல், வெடி குண்டு எறிதல், சட்டங்களை மீறுதல், சத்தி யாக்கிரகம் என்னும் பேரால் அரசாங்கத் திற்குத் தொல்லை கொடுத்தல், பட்டினி கிடத்தல் என்னும் பேரால் குழப்பங்களை உண்டாக்குதல் முதலிய காரியங்களையும் துணிவுடன் செய்தார்கள்.
அவற்றில் இன்று காமராசரைக் கொல்ல, செய்கிற கொலை பாதகச் செயல்களைப் போலவே வைசிராய் மீது வெடிகுண்டெறியும் அளவுக்கு துணிந்து காரிய மாற்றினார்கள். இப்படியெல்லாம் செய்து எதிரிகளை ஒழித்து, ஆட்சியைக் கைப்பற்றியவுடன் செய்த காரியம் என்ன வென்றால் 100-க்கு 7 பேர்கள் மாத்திரம் படித்தவர்களாகவும், 90-க்கு மேற்பட்ட வர்கள் தற்குறிகளாக வும் இருக்கும் இந்த நாட்டில் ஆட்சி பீடத்திலமர்ந்ததும் முதல் வேலையாக 2500, 3000, 6000 என்கின்ற கணக்கில் பள்ளிக்கூடங்களை மூடவும் மக்களை எல்லாம் இந்தி படித்தாகவேண் டும் என்று கட்டாயப்படுத்தவும் இவை மாத்திரமல்லாமல் மாணவர்கள் பள்ளி யில் ஒரு நேரம் மாத்திரமே படித்துவிட்டு மறுநேரம் (பார்ப்பனரல்லாத மாணவர் கள்) கண்டிப்பாய் அவரவர் ஜாதித் தொழி லைப் படித்து ஆகவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போடும் காரியத் தைத்தான் செய்தார்கள். இப்படிப்பட்ட காரியங்களின் பலனாய் காங்கிரசில் இருந்த பார்பன ஆதிக்கம் ஒழிந்து, இன்று காங்கிரஸ் பெரிதும் பார்ப்பனரல்லாதவர் கள் கையில் வந்து காங்கிரஸ் கொள்கை எல்லோருக்கும் படிப்பு, எல்லோருக் கும் வீடு, எல்லோருக்கும் வேலை, எல்லோ ருக்கும் வயிறார உணவு, சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் எல்லா மக்களுக் கும் சமநிலை வாழ்வு, என்ற திட்டமேற் படுத்தி அதற்கு ஒரு பார்ப்பனரல்லாத வகுப்பைச் சேர்ந்த ஒரு பெருமகன் தலை வனாக ஏற்பட்டவுடன் பழைய முறை யைப் பார்ப்பனர் கையாளத் தொடங்கி, தலைவரை (காமராசரை) பட்டப்பகலில் லட்சக்கணக்கான மக்கள் சேர்ந்து, கொல் லும் பணியைக் கையாள முயற்சித்து அவர் தங்கி இருந்தவீட்டைத் தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறார்கள். இனியும் அம்முயற்சியில் இருந்து வருகிறார்கள்.
இம்முயற்சிக்கு சாதுக்கள் மகான்கள் என்னும் பார்ப்பனர் கள் குருமார் என்னும் சங்கராச்சாரியார்கள், பல மந்திரிகள் மற்றும் பல அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், சற்று ஏறக்குறைய எல்லா பார்ப்பன பத்திரிகைக்காரர்கள்; இவர்கள் மாத்திரமல்லாமல் கோடீசுவர பிரபுக்கள் உடந்தையாளர் களாகவும் ஆதரவாளர் களாகவும் உள்ளுக்குள் இருந்து தூண்டி விடுபவர்களாகவும் இருந்து வருகின்றார் கள். எனவே இவைதான் பார்ப்பன தர்மம் என்பதை எடுத்துக்காட்டு வதற்காகவே இவற்றை இதில் குறப்பிடுகிறேன்.
நிற்க, மதத்திற்காக, தர்மத்திற்காக, மத சுதந்திரத்திற்காக இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய ஈடுபட்டிருக்கும் இந்தப் பார்ப்பனர்களால் சொல்லப்படும் கடவுள்கள், மதம், வேதம், சாஸ்திரம், தர்மம் ஆகிய இவைகளைப் பற்றி பார்ப் பனர் அல்லாத நம்மவர்கள் யாருக்காவது தெரியுமா? தெரிந்த தமிழர்களே, திரா விடர்களே, யாராவது நமது நட்டில் இருக் இருக்கிறார்களா? பார்ப்பானின் உயர் வுக்கும், நம் இழிவுக்கும் ஏற்றதான கருத் துகள், காரியங்கள் எவை எவையோ அவைகளைத்தான் நம்மக்கள் கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் என்பதை நினைத் துக்கொண்டும் அவைகளை அனுசரித்து நடந்து கொண்டும்தானே வருகின்றார் கள்? இதன் பயனாகத்தான் மற்ற யார் எக்கேடு கெட்டாலும் தமிழ் மகன் இழிமகன் ஈனசாதியான் ஆனான்.
நானும் எனது கழகமும் இந்த 40 ஆண்டுகளாக எவ் வளவோ பாடுபட்ட தன் பயனாய் ஏற்பட்ட ஒரு மாறுதலை அடியோடு ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் செய்யும் முயற்சி யின் சின்னம்தான் காம ராஜர் கொலை முயற்சியாக உரு வெடுத்து விட்டது.
இந்நிலையை இனியும் ஏற்படாமல் தடுக்கவேண்டு மானால், தமிழர்கள் எல்லோரும் ஆரியர்களின் கடவுள்கள், மதம், சாஸ்திரங்கள், தர்மங்கள் ஆகிய வைகளை கண்டிப்பாய் வெறுத்து ஒதுக்கி ஓரளவுக்காகவது பகுத்தறிவுவாதிகளாக ஆக்கித் தீரவேண்டும்.
இன்றைய (ஆரிய) கடவுள்களும் மத மும் மத தர்மங்களும் உலகக் கண்ணின் முன் தமிழர்களுக்கு மிக மிக இழிவைத் தருவதாக இருக்கின்றது. மற்றும் எப்படிப் பார்த்தாலும், எத்தக்கண் கொண்டு சிந்தித் தாலும் பார்ப்பான் உயர்வு தர்மத்தை காப் பாற்றுவது என்னும் கருத்தில் மனுதர் மத்தைக் காப்பாற்றுவதற்காக பசு பாது காப்பு என்னும் பேரால் திட்டமிட்டு முன் னதாகவே சொல்லி எச்சரிக்கை செய்து விட்ட காமராஜரைக் கொல்லும் முயற்சி யைப் பார்ப்பனர்கள் கையாண்டு இருக் கின்றார்கள்.
பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரவேண்டுமானால், அதற்கு காமராஜ ரைக் கொல்லவேண்டிய அவசியம் எப் படி ஏற்படும்? அதற்காகக் கொல்லப்பட வேண்டியவர்கள் யார் என்பது பார்ப்பனர் களுக்குத் தெரியாத விஷயமாய் இருக்க முடியுமா?
இன்று இந்திய அரசியல் ஆதிக்கத்தில் இருப்பவர்களில் இராஷ்டிரபதி, பிரதமர், மந்திரி முதல் கொண்டு சிறிய அதிகாரி வரையில் பார்ப்பனர் ஆதிக்கம் இருந்து வருவதில் எதிர்ப்போ, அதிருப்தியோ கொண்டவர்கள் ஒருவர்கூட இல்லையே!
அதுமாத்திரம் அல்லாமல், காமராஜர் தலைமையைச் சகித்துக் கொண்டு இருப் பவர்களையும் ஒருவரைக்கூட காண முடியவில்லையே! இந்த நிலைதானே காமராஜர் கொலை முயற்சிக்கு அடிப்படை ஆதாரமாய் இருந்து வந்த துடன் அதனால்தானே பசுவதைத் தடுப்பு என்னும் பேரால் காமராஜரைக் கொன்று ஆகவேண்டும் என்கின்ற முடிவு பார்ப் பனருக்கு இந்தியப் பார்ப்பனர் எல்லோ ருக்கும் ஏற்படவேண்டியது அரசியலா யிற்று. ஆகவே இந்தியா உள்ள அளவும், இந்து மதமும் இந்துமத ஆதிக்கமும் இவைகளால் உயர்வு அனுபவிக்கும் பார்ப்பனர் உள்ள வரையிலும் இவை களை ஒழிக்காமல் இந்தியாவில் சமுதாயப் புரட்சி என்பது அமாவாசை அன்று பூர்ணச் சந்திரனைக் காண முயற்சிப்ப தைப் போன்ற காரியமேயாகும் என்றே நினைக்கின்றேன்.
இன்று நாடு ஜனநாயகம் என்னும் காரணமாக பாதுகாப்பு அற்ற தன்மையை அடைந்துவிட்டது. அது மாத்திரமல்லா மல் அரசியல் காரணமாக மக்களிடம் பீதி, நேர்மை, நாணயம், ஒழுக்கம், மனிதத் தன்மை ஆகியவை 100-க்கு 75 பாகம் இல்ல மல் போய்விட்டது. இருப்பவர் களின் நிலைமை மிகமிகப் பரிதாபத்திற்கு இடமாகிவிட்டது.
இவ்வளவுக்கும் இடையில் ஜனநாய கத்தை எப்படியாவது நல்வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முயற் சித்தால், அதனால் வெற்றி ஏற்படு வதோ தோல்வி ஏற்படு வதோ ஒருபுறம் இருந்தாலும் முயற்சிக்கவே முடியாத மாதிரி இந்திய யூனியன் என்னும் அமைப்பு ஒரு பெரிய மலைபோல் குறுக்கே தடையாக நின்றுகொண்டு இருக்கின்றது. இந்தத் தடையை அகற்ற வேண்டுமானால், சமுதாயப் புரட்சியைத் தடுக்கப் பார்ப்பனர்கள் நடத்தும் இன் றைய கொலை, நாச முயற்சிகள் போல் பல பங்கு அதிகமாகச் செய்யவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
இப்படியெல்லாம் இருந்தாலும் நாம் நம்பிக்கை இழிந்து விடவில்லை. ஆகவே பொதுமக்கள் காமராஜர் கொலை முயற்சி என்ற தொகுப்பு புத்தகத்தை ஒவ்வொரு தமிழனும் ஒரு தடவை மாத்திரம் அல்லாமல், பல தடவை படித்துப் பார்த்து சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண் டும் என்று ஆசைப் படுகின்றேன.
இந்தப் புத்தகத்தை நல்ல முறையில் தொகுத்து வெளியிட்ட நண்பர் வீரமணி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
- ஈ.வெ. ராமசாமி
No comments:
Post a Comment