பெரியார்பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் கூறியதும் - குமுறும் பார்ப்பனர்களும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

பெரியார்பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் கூறியதும் - குமுறும் பார்ப்பனர்களும்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்


தமிழக பாரதீய ஜனதா கட்சிக்குத் தலை வராக எல். முருகன் - பெரியார் விஷயத்தில் வேறு வகையான அணுகுமுறையை மேற் கொள்கிறார்.


தந்தை பெரியார் பிறந்த நாளான செப் டம்பர் 17 அன்று, செய்தியாளர்கள், “பெரி யார் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரி விப்பீர்களா” என்று கேட்ட கேள்விக்கு  “தந்தை பெரியார் சமூக சீர்திருத்தவாதி - வாழ்த்து சொல்வதில் எந்த விதத் தடையும் இல்லை” என்றார்.



காவல்துறை அதிகாரியாக இருந்து, அதிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து, தமிழக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்ட கே.அண்ணா மலை, தந்தை பெரியார் என்று அழைக்கு மாறு கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார். சமூகநீதிக்காகவும், ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும் தந்தை பெரியார் போராடினார் என்று  டிவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். அதற்குப் பிறகும் விழுப்புரத்தில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் ‘தந்தை பெரியார் நிறைய சமூக மாற்றங்களைச் செய்துள்ளார். அவரது நல்ல கொள்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் கடவுள் இல்லை என்பதை ஏற்க முடியாது என்றார்.


தந்தை பெரியார் பற்றிய எந்த விமர்சன மும், பதிவும் வேண்டாம்‘ என்று, பா.ஜ.க.வின் சமூக வலைதளப் பிரிவிற்கு அறிவுறுத்தியும் உள்ளார்.


தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தந்தை பெரியார் பற்றிய கருத்தில் உடன் படுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.


இவை எல்லாம் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டில் (25.9.2020) “BJP in a Quagmire over Periyar Politics” எனும் தலைப்பில் வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஆகும்.


“பெரியாரை விமர்சனம் செய்வதன் மூலம் தமிழக  வாக்காளர்களிடமிருந்து பா.ஜ.க. விலகி நிற்கிறது. பெரியாரை அங் கீகரிப்பதன் மூலம் வரவேற்கத்தக்க, சரி யான நடவடிக்கையை முருகன் எடுத்து உள்ளார். இது தமிழகத்தில் பா.ஜ.க. மேலும் வளரக் கூடும்“ என்றார் அரசியல் ஆய் வாளர் காசிநாதன் என்றும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ கட்டுரை குறிப்பிட்டுள்ளது.


“தந்தை பெரியாரைப் புகழ்வது என்பது பா.ஜ.க. மேற்கொள்ளும் ஒரு யுக்தியே - இதில் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார் கள்” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ‘விடு தலை’யில் (26.9.2020) அறிக்கை மூலம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டார்.


அவ்வறிக்கையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றொரு தகவலையும் அம்பலப் படுத்தியுள்ளார்.


பா.ஜ.க.வில் பார்ப்பனர் அல்லாத நிரு வாகிகள் தந்தை பெரியார் பற்றி சொன்ன கருத்துக்களுக்கு எதிராக பா.ஜ.க.வில் உள்ள பார்ப்பன நிருவாகிகள் எதிர் கருத்து வைத்திருப்பதைச் எடுத்துக்காட்டி - இதில் கூட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற உத்தி பிரிந்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். கோலாகல சீனிவாசன், திருப்பதி நாராயணன் என்ற இரு பார்ப்ப னர்களும் தமிழக பா.ஜ.க. தலைவரின் கருத்துக்கு எதிர் நிலை எடுத்திருப்பதையும் புரிந்து கொண்டால், திராவிடர் கழகத் தலை வர் தெரிவித்துள்ள கருத்தின் உண்மை எத்தகையது என்பது எளிதில் விளங்கும்.


இந்தப் பார்ப்பன அணியில் ‘துக்ளக்‘கின் குருமூர்த்தி அய்யரும் கலந்து கொண்டு இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. இவர் ‘துக்ளக்‘கில் (7.10.2020) எடுத்த எடுப்பிலேயே முதல் பக்கத்தில் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஒரு கேள்வி - பதிலை வெளியிட்டுள்ளார்.


“பா.ஜ.க.வுக்கு தேசியமே தனித்தன்மை. அதில் ஈ.வெ.ரா.வைக் கலந்து குழப்பி குளறுபடி செய்யாமல் இருப்பது பா.ஜ.க. வுக்கு நல்லது, தேசியத்துக்கும் நல்லது” - என்று இதோபதேசம் செய்திருக்கிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.


ஆசாமி - ரொம்பவும் பதற்றம் அடைந் திருக்கிறார் என்றே தெரிகிறது. பா.ஜ.க., சங்பரிவார் மற்றும் அக்கிரகார வாசிகள்தான் பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் எதிர்த்துக் கொண்டுள்ளனர் - இப்பொழுது பா.ஜ.க.வும் பெரியாரை நெருங்கினால் நம் பூணூல் கெதி என்னாவது என்று மிகவும் பதற்றப்படுகிறார் போலும்.


தி.க.விலிருந்து தி.மு.க. விலகி இருக்க வேண்டும் என்று அடிக்கடி எழுதும் குரு மூர்த்திக்கு - தமிழக பா.ஜ.க. தலைவர் தந்தை பெரியார்பற்றி தெரிவித்த கருத்து அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அடி மடியிலேயே கை வைத்து விட்டதே இந்தப் பெரியார் மண் என்ற திகிலில் பிலாக்கணம் பாட ஆரம்பித்து விட்டார்.


ஒரு தாழ்த்தப்பட்ட வரை தமிழக பா.ஜ.க. தலைவராக வைத்தது ஆபத்தாகப் போயிற்றே என்றுகூட  அவர் எண்ணுவார். மேலிடத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக் கைப்  பயன்படுத்தி அவர் பதவிக்கு முள்ளு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (டாக்டர் கிருபாநிதி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக பா.ஜ. க.வுக்குத் தலைவராக வந்தபோது அவர் பட்ட அவமானத்தை அவரே சொல்லி வேத னைப்பட்டதுண்டு. கட்சிக்கு முழுக் குப்போட்டு, தி.மு.க.வுக்குச் சென்றதுதான் மிச்சம்).


அகில இந்தியத் தலைவராக வந்த பங்காரு இலட்சுமணனுக்குத்தான் என்ன மரியாதை? உமாபாரதியும், கல்யாண்சிங்கும் பா.ஜ.க. என்பது பார்ப்பனக் கட்சியே என்று பகிரங்க மாகக் குற்றம் சாட்டவில்லையா! இந்த நிலையில் தமிழகச் சூழலில் ஒரு தாழ்த் தப்பட்ட தோழரைத் தலைவராக்கினாலும் கூட "இது பெரியார் மண்" என்பதால்தான் - ஒரு தூண்டிலைத் தூக்கிப் போட்டுப் பார்க்கலாம் என்ற நப்பாசைதான்.


பா.ஜ.க. தேசியக் கட்சி - ஈ.வெ.ரா. தேசியத்துக்கு விரோதமானவர் - அவருடன் நெருங்குவதா என்று குருமூர்த்தியும், பார்ப் பனரான கோலாகல சீனுவாசும் பதறுகிறார் கள்.


இவர்கள் தேசியம் என்று சொல்லுவது எல்லாம் வேறு ஒன்றும் இல்லை. பார்ப்பன ருக்கானது என்ற பொருளை உள்ளுக்குள் வைத்துப் பூசும் ‘கில்ட்டு’தான்.


பா.ஜ.க.வுக்குத் தேசியமே அடிப்படை யாம்.


இவர்கள் கூறும் தேசியம் என்பது என்ன? இவர்களின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் தேசியம் பற்றி என்ன கூறு கிறார்?


“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லா தவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது அல்லது இந்தத் தேசத்தை முழு வதும் ஆதரிக்க வேண்டும். எதையும் கேட்காமல் எந்த சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையும் இன்றி  இருத்தல் வேண்டும்“


(எம்.எஸ். கோல்வால்கரால் எழுதப் பட்ட We or Our Nationhood Defined -  தமிழில் வரையறுக்கப்பட்ட நமது தேசியம்“ எனும் நூலிலிருந்து)


இதனை ஏற்றுக் கொண்டால்தான் தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத் தவரையும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரையும் தேசியவாதிகள் என்று ஏற்றுக் கொள்வார்களோ!


இவர்கள் கூறும் நேஷன் - அதாவது தேசியம் பற்றி தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?


“இந்தியா ஒரு நேஷனா? அதற்கு ஒரு மொழி எது? மதம் எது? இந்தியாவில் எத்தனை மதம்? எத்தனை ஆச்சார, அனுஷ்டானம், இந்து மதம் என்பதைத் தமிழர்கள் ஒப்புக் கொள்கிறார்களா?


இந்து மதத்தால்தான் இந்தியா நேஷன் ஆயிற்று என்றால், அதாவது நேஷனுக்கு மதமே பிரதானம் என்றால் இஸ்லாமிய ருக்கும், கிறிஸ்தவருக்கும், பவுத்தருக்கும், பார்சிகளுக்கும் இந்தியா நேஷன் ஆகுமா? எதைக் கொண்டு அவர்கள் இந்தியாவை நேஷன் என்பது? மொழியைக் கொண்டு இந்தியாவை ஒரு நேஷன் என்று கூற  முடியுமா? (‘பகுத்தறிவு’ மலர் - 3, இதழ்-6,  ஆண்டு 1937 - கொல்லம்பாளையம் பேச்சு)


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிதா மகன் டாக்டர் அம்பேத்கர் ‘தேசியம்‘ பற்றி யும், அதன் உள்ளடக்கத்தைப் பற்றியும் இவ்வாறு கூறுகிறார்.


“தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பன சர்க்கார்தானே! 1937இல் வெற்றி பெற்ற ஏழு மாகாணங்களிலும் பார்ப்பன முதல் மந்திரி கள்தாம். நாளைக்கு எல்லா மக்களுக்கும் “ஓட்டு கொடுத்து அதன் மூலம் ஒரு சர்க் காரை ஏற்படுத்தினால், அதிலும் பார்ப்பனர் கள் தானே ஆட்சி செலுத்துவார்கள்? பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும், பார்ப்பாத்திகளே மெஜாரிட்டியாய் வரு வார்கள்!”


- அண்ணல் அம்பேத்கர், ‘குடிஅரசு’ 30.9.1944)


மக்களை மயக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திக் குளிர் காயலாம் என்று எத்தனிக்கிறார்கள்.


இதே ஆடிட்டர் குருமூர்த்தி 2015 ஜூலையில் தமிழகத்தின் சில ஜாதித் தலைவர்களை டில்லிக்கு அழைத்துச் சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வைத்தார். மதுரையில் நடத்த விடுத்த ஒரு மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி 2015 ஆகஸ்டு 13ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் அமித்ஷாவும் பங்கேற்றார்.


அந்த மாநாட்டின் நோக்கம் என்ன தெரியுமா? இதோஅமித்ஷாவின் வாயா லேயே கேட்கலாம்.


“உங்கள் சமூகம் எவ்வளவு உயர்ந்தது என்று மத்தியப் பிரதேசத்தில் ஒரு மாநாட்டில் ஒரு மாணவன் சமர்ப்பித்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன். அதில் தென்னிந்தி யாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்று பசுவை வணங்கி தேவேந்திரனை வழி படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதிலிருந்து உங்கள் சமுதாயத்தின்மீது மரியாதை ஏற்பட்டது. இந்தியாவிலேயே அனைத்து ஜாதிகளும் எங்களை பி.சி. பட்டியலில் (பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில்) சேருங்கள் என்று லாபத்தை எதிர் பார்த்துக் கேட்கும்போது  எங்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம் என்று கூறும் ஒரு சமுதாயத்தை இங்கு தான் பார்க்கிறேன். உங்களுக்காக பிரதமரிடம் பேசி நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பேன்” என்று பேசவில்லையா?


அந்த மாநாட்டு மேடையில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அமர்வதற்குக் கூட இடம் கொடுக்காமல் குருமூர்த்திகளும், ராஜாக்களும் மேடையில் அமர்ந்து இர சித்தது என்பது வேறு!?


தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலேயே சில கருப்பாடுகளைப் பிடித்து எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல வைத்ததன் பின்னணியில்  இருப்பது இந்த நயவஞ்சக பார்ப்பனீய ராஜகுரு  குருமூர்த்தி தான்.


இதனை எல்லாம் தமிழக பா.ஜ.க. தலை வர் எல். முருகன் அறிய வேண்டும் - இந்தக் குள்ள நரிகளிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர் களின் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர மற்ற கொள்கைகளை ஏற்பதாகக் கூறும் தமிழக பா.ஜ.க. தலைவருக்கு ஒன்றை நினைவூட்டுகிறோம். ‘விடுதலை’ அறிக்கையில் (26.9.2020) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கூறியதை எடுத்துக் காட்டுகிறோம்.


“ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வி" என்று கூறும் இவர்கள் “ஒரே ஜாதிதான் இனி” அதாவது ஜாதியை ஒழிக்க அவசர சட்டம் கொண்டு வரட்டும்!”


“மனுதர்மத்தை ஏற்க மாட்டோம் - உங்க ளைப் போலவே எதிர்ப்போம் - எரிப்போம் - கீதையை ஒப்புக் கொள்ள மாட்டோம் எல்லோரும் ஒன்று,  என்ற சமத்துவ சமு தாயத்தை சமைப்போம் என்று பிரகடனப் படுத்தட்டும், செய்ய முன் வருவார்களா?” என்று தமிழக பா.ஜ.க. தலைவரை நோக்கி யல்ல - அவர்களின் அகில இந்தியத் தலை மையை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி.


மத்திய பா.ஜ.க.வின் செயற்குழுவிலும் தந்தை பெரியார்பற்றி இங்கு கூறியதை யாவது குறைந்தபட்சம் தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் கூறட்டுமே பார்க் கலாம்?


தந்தை பெரியாரால் உறுதியாக தெளி வாகப் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண் ணில் தந்திர உபாயங்களை செய்து கால் ஊன்றலாம் என்று நினைப்பதேகூட சிறு பிள்ளைத்தனம்தான்!


No comments:

Post a Comment