பூமிக்கு என்று ஒரு துணைக்கோள் நிலவு இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் தற்போது நமது பூமிக்கு மற்றொரு துணைக்கோள் உள்ளது கண்டறியப் பட்டுள்ளது.
உயிரோட்டமுள்ள பெருவெளி அதில் எண்ணிலடங்கா பால்வெளி மண்டலங்கள் அதில் ஒன்று நமது பால்வெளிமண்டலம் ஆகும். நமது பால்வெளி மண்டலத்தில் 17 லட்சம் கோடி விண்மீன்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிற இத்தனை விண்மீன்களில் முக்கால் வாசிவிண்மீன்கள் நமது சூரிய மண்டலத்தைப் போலவே பல கோள்களைக் கொண்ட குடும்பமாக இருக்கிறது. இந்த கோள்களில் உயிரினங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து வரும் நிலையில் நமது பூமி இன்னுமொரு நிலவைக் கொண்டுள்ளது என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புவியின் வட்டப்பாதையில் தொடர்ந்து பயணித்துவரும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்துவரும் எம் பி எம் என்ற பன்னாட்டு வானியல் ஆய்வு மையம் சீரான வட்டப்பாதையில் ஒரு பொருள் தொடர்ந்து பூமியைச் சுற்றிவருவதைக் கண்டறிந் துள்ளது. பொதுவாக இது பூமியை மிகவும் மெதுவாக சுற்றிவருவதால் இதை இத்தனை ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. தற்போது அதன் வட்டப்பாதையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருந்த போது நமது புதிய நிலவு ஆய்வாளர் களின் கண்களுக்குப்பட்டுள்ளது. அந்தச் சிறு நிலவு ஒரு குறுங்கோளாகும். இதற்கு ’2020 CD3’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் விட்டம் 1.9-3.5 மீட்டராக உள்ளது; ஒரு நடுத்தர எருமை மாடு அல்லது காண்டா மிருகத்தின் அளவைக் கொண்டுள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்ற னர். அந்த 'புதிய நிலவு’ தற்காலிகமாக பூமிக்கு அண்மையில் தற்போது வந்துள்ளது. பூமியைச் சுற்றிவர இது பல ஆயிரம் ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும் என்பதால் அறிவியலாளர்கள் பார்வையில் படாமல் இதுவரை சுற்றி வந்துகொண்டு உள்ளது. இன்னும் எத்தனை அறிவியல் புதிர்கள் நமக்கு அருகிலேயே ஒளிந்துள்ளது என்பதை தொடர்ந்து அறிவியலாளர்கள் கண்டுபிடித்துத் தகவல் கொடுத்து கொண்டு இருப்பார்கள்.
No comments:
Post a Comment