கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற திராவிடர் கழக கொடியேற்றுவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற திராவிடர் கழக கொடியேற்றுவிழா


நாகர்கோவில், அக். 18 கன்னியாகுமரி மாவட்ட கழகக் சார்பில் கொடி யேற்று விழா நாகர்கோவில் ஒழு கினசேரியில் நடைபெற்றது.  இதற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் எம். எம். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.


மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன், மாநகர தலைவர் பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலை வர் உ.சிவதாணு ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் கொடியினை ஏற்றிவைத் தார்.  


விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் பழனி சங்கர நாராயணன், அகஸ் தீஸ்வரம் ஒன்றிய தலைவர் குமார தாஸ், தக்கலை ஒன்றிய கக தலைவர் இராஜீவ்லால் மகளிர் பாசறை அமைப்பாளர் சுதா பழனி,  தலைவர் மஞ்சு குமாரதாஸ், ப.க. மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா. இராஜேஸ், மாநகர செயலாளர் செ. ஆனந்தன் மாநகர துணைத் தலைவர் கவிஞர். செய்க் முகமது, மாநகர இளை ஞர் அணி அமைப்பாளர் ம.மகேஷ், கழகத்தோழர்கள் கூடங்குளம் பால கிருஷ்ணன், தேரூர் இசைக் கண்ணன், கருங்கல் ஷெர்பின், குளச்சல் டேனி ஷெனாய், கடுக்கரை தமிழ் அரசன், சி.அய்சக் நியூட்டன், ம.செல்வராசு, ஆன்டனிராசா  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment