சென்னை, அக். 30- மதவெறி மூலம் மக்களை பிளவுபடுத்தி தமிழகத்தில் அரசியல் ஆதா யம் தேட பா.ஜ.க. முயற்சிக் கிறது'. என விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திரு மாவளவன் குற்றம் சாட்டி யுள்ளார்.
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சத வீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் 28.10.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயங்குகிறது. இந்துத் துக்களின் காவலன் என்று கூறிக் கொள்ளும் பா.ஜ.க. அரசு இதை நடப்பு ஆண்டி லேயே செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களை கொடுக்க முடியாது என்று தமிழக அரசு மறுக்கவேண்டும்.
தமிழகத்தில் இனவெறி யைத் தூண்டும் வகையில் எனக்கெதிரான போராட் டங்களை பா.ஜ.க. நடத்தி வருகிறது. திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலை களுக்கு காவி சாயம் பூசுகிறார் கள். இதுதான் பா.ஜ.க.வின் சமூக நீதியா? வடமாநிலங்கள் போல, தமிழகத்திலும் மத வெறியை தூண்டி அதன் மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சிக்கிறது. என்ன தான் முயற்சி செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஜம்பம் பலிக்காது.
என்னை கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் காலாவதியானவர்களை களத்தில் இறக்கி பா.ஜ.க. போராட வைக்கின்றது. காலாவதியானவர்களின் கூடாரமாகவே தமிழக பா.ஜ.க. உள்ளது. இவர்கள், எதற்கெடுத்தாலும் வேல் மற்றும் திரிசூலத்தை தூக்கி கொள்கிறார்கள். சமூக நீதி பற்றி பேசும் எவரும் மனுநீதி பற்றி பேசாமல் இருக்க முடி யாது. அந்த வகையில் தான் மனுநீதியை மேற்கோள்காட்டி சில கருத்துகளை சொன் னேன். அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் இதற்கு முன்பு பேசியதைதான் நானும் பேசி னேன், புதிதாக எதையும் பேச வில்லை. நான் பெண்களை கொச்சைப்படுத்திப் பேச வில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment