ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 7, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • ஹாத்ராஸ் பாலியல் சம்பவம் அதிர்ச்சி தரும் விதத்தில் உள்ளது. வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கும், சாட்சிகளுக் கும் அளிக்கப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொண்ட விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உ.பி., யோகி அரசுக்கு தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

  • ஹாத்ராஸ் சம்பவம் தொடர்பாக யோகி தலைமையிலான உ.பி. அரசின் நடவடிக்கைகள் தவறானவை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தராமல், சம்பவத்தை கண்டிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை என்பது பிரச்சினையைத் திசை திருப்புவதாகும் என மூத்த பத்திரிக்கையாளர் பர்சா வெங்க டேஸ்வர் ராவ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • பீகார் மாநில தேர்தலில், அய்க்கிய ஜனதா தளம் 122 இடங் களிலும், பாஜக 121 இடங்களிலும் போட்டியிடுவது என்றும் நிதிஷ் குமார் முதல்வர் வேட்பாளர் என்றும் அய்க்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அறிவித்துள்ளது.

  • அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வெளி மாநில மாணவர்கள் உட்பட, கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

  • ஹாத்ராஸ் பாலியல் சம்பவம் கொலைகாரர்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று கன்னியாகுமரி பாஜகவினர் போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ஹாத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனமாக உள்ளார். உபி முதல்வர் யோகி, இது வெளிநாட்டு சதி என்கிறார். பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினரை சந்திக்கும் நாகரிகம் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • உபியின் முதல்வராக யோகி ஆதித்ய நாத் பொறுப்பேற்றதும் தன் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். காவல் துறைக்கு முழு அதிகாரம் என்ற போர்வையில் சட்டம் ஒழுங்கை மீறி ஆட்சி நடக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் ஆரத்தி ஆர்.ஜெராத் குறிப்பிட்டுள்ளார்.


தி டெலிகிராப்:



  • பிரதமர் மோடி ஆட்சியின் தன்னிச்சையான செயல்பாட்டை தடுப்பதில் எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு, எதிர்க்கட்சிகள் எல்லா நாடுகளிலும் ஒரு வரையறுக்குள் செயல்படு கின்றன. அவர்களுக்கு ஊடகம், நீதித்துறை போன்றவைகள் பக்க பலமாக செயல்படும். ஆனால், இந்தியாவில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் மோடி அரசால் கைப்பற்றப்பட்டுவிட்டது. இந்த நிறு வனங்கள் சுதந்திரமாக செயல்பட்டால், மோடி அரசு தொடர்ந்து நீடிக்க முடியாது. இந்திய எல்லையில் சீனா 1200 கி.மீ. இடத்தை ஆக்கிரமித்துள்ளது. ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு உள்ளது. நான் சொல்வதை நம்ப வேண்டாம். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டால் உண்மை விளங்கும். பண மதிப்பிழப்பு முதல் வேளாண் மசோதாக்கள் வரை, மோடி அரசு, அம்பானி -அதானி களுக்கு சாதகமாக இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.


- குடந்தை கருணா


7.10.2020


No comments:

Post a Comment