டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- பீகார் மாநில தேர்தலில் லாலு பிரசாத், ராம் விலாஸ் பஸ்வானுக்கு அடுத்து தற்போது நிதிஷ்குமார் மட்டும்தான் மூத்த தலைவர். அங்கே தலைமுறை மாற்றம் தேவைப்படுகிறது என மூத்த பத்திரிக்கையாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- வரும் கல்வியாண்டில் இருந்து அய்.அய்.டி. மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான ஜே.இ.இ. தேர்வு மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
- ஸ்டேஸ் பாங்க் ஆப் இந்தியாவில் இள நிலை உதவியாளர்கள் பதவிக்கான தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் குழப்பம் நிலவுவாதகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என சிபிஎம் - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் மத்திய சமூக நலத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- இந்தியாவின் எதிர்க்கட்சிகள் அரசியல், பொருளாதார எதிர்ப்பை தற்போது மோடி ஆட்சியில் நடைபெறும் மாற்றத்தை அறிந்து அதற்கேற்ப எதிர்த்திட வேண்டும் என பத்திரிக்கையாளர் பிரதாப் பானு மேத்தா கருத்திட்டுள்ளார்.
- பீகார் மாநிலத் தேர்தல் வாக்குறுதியாக கரோனா தடுப்பூசியை இலவசமாக அளிப்போம் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை, கரோனா தொற்றைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் பயத்தை வாக்குகளாக மாற்றும் உத்தி என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- அடித்தட்டு மக்களிடம் அரசு பணத்தைக் கொண்டு செல்லாமல், பொருளாதார மீட்பு இந்தியாவில் நடக்காது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தி இந்து:
- மருத்துவக் கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டம் பற்றி முடிவெடுக்க மேலும் மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவைப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பன் வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.
- பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் அய்க்கிய ஜனதா தளமும் நேரடி கூட்டணியும், பஸ்வானின் லோக்சக்தி கட்சி மறைமுகக் கூட்டணியும், ஒவைசியின் எம்.அய்.எம். கட்சி ரகசியக் கூட்டணியும் வைத்துள்ளது என ஆர்.ஜே.டி.கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் கே.ஜா தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
- கரோனா தடுப்பூசியை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இலவசமாக கொடுப்போம் என பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, இன்னமும் தடுப்பூசி பற்றி எந்த தெளிவும் இல்லாத சூழலில் மக்களின் கனவை விற்பதாகும் என சுகாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
- ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற அட்டவணையை வெளியிட்டு தடுப்பூசி அந்த மாநில மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்றும் அறிவியுங்கள் என மோடி அரசைக் கிண்டலடித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
22.10.2020
No comments:
Post a Comment