ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 4, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • இந்தி நடிகர் சுசாந்த் மரணம் குறித்து வட இந்திய ஆங்கில / இந்தி தொலைக்காட்சி ஊடகங்களால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தற்கொலை அல்ல, கொலை என்று செய்தியாக்கப்பட்டு வந்த நிலையில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, நடிகரின் மரணம் தற்கொலைதான் என அறிக்கை அளித்துள்ளது.

  • உ.பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடும்பத் தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். நீதி கிடைக்கும்வரை ஆதரவு தருவோம் என்றும் கூறினர். இதற்கிடையில், இந்த படுகொலை குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.

  • உ.பி. மாநிலக் காவல்துறை அவசரம் அவசரமாக மரணம் அடைந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் சடலத்தை எரித்தது ஏன்? குற் றம் புரிந்தவர்களும், முதல்வரும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உ.பி. முதல்வர் யோகி அவர்களைப் பாதுகாக்க நினைக் கிறாரா? உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் உடனடி விசா ரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசின் முன்னாள் அதிகாரியும் எழுத்தாளருமான பவன் கே.வர்மா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • பீகார் மாநிலத் தேர்தலில், ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப் பட்டுள்ளார். ஆர்.ஜே.டி.க்கு 144 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்கள், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 29 இடங்கள் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஆர்.ஜே.டி. கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். முன்னர் திமுக சார்பில் திருச்சி சிவா, எம்.பி. வழக்கு தொடுத்துள்ளார்.

  • வேளாண் மசோதாக்கள் குறித்து, பிரதமர் மோடி முதல் பா,ஜ,க,வினர் அனைவரும் தவறான தகவல்களைத்தான் தருகின்றனர் என ஆதாரத்துடன் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரை யில் விவரித்துள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • கருநாடகாவில் தனது ஆட்சியின்போது ரூ.162 கோடி செல விட்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் தயாரிக்கப் பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அறிக்கையை உடனே அரசு ஏற்க வேண்டும். இல்லையேல், பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு கள் தெருவில் இறங்கி போராடும் என கருநாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.


தி டெலிகிராப்:


ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி மரணமுற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கல்கத்தாவில் பேரணி நடை பெற்றது. கரோனாவைவிட மிகப் பெரிய தொற்று நோய் பாஜக என மம்தா கடுமையாக சாடினார்.


- குடந்தை கருணா


4.10.2020


No comments:

Post a Comment