டெக்கான் கிரானிகல், சென்னை:
- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்பதன் அடிப்படையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணைவேந்தர் சூரப்பாவை நீக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்துகின்றன. ஆளும் அதிமுக அரசின் சில நடவடிக்கைகளுக்கு துணை வேந்தர் எதிர்ப்பாக இருந்ததால், ஆளும் கட்சியும் எதிர்க்கிற ஒரு புதிய சூழல் அரசியல் களத்தில் உருவாகியுள்ளது என கட்டுரையாளர் பாபு ஜெயகுமார் விவரித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போதுள்ள இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். கட்டணம் அதிகமாகும். நுழைவுத்தேர்வு உண்டு ஆகிய காரணங் களின் அடிப்படையில் உயர் சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக் கழகத்திற்கு தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
- மருத்துவக் கல்வியில் பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு முடிவில், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவைச் சேர்ந்த சோயிப் அப்தாவும், தில்லியைச் சேர்ந்த அகன்கா சிங் இருவரும் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். சோயிப்பின் தந்தை கட்டுமான நிறுவனம் வைத்து உள்ளார். ராஜஸ்தான் கோடாவில், இரண்டாண்டு நீட் பயிற்சிக்காக தாய், தங்கையுடன் தங்கி பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி இந்து:
- உ.பி.யில் மதுரா கிருஷ்ணன் கோவில் ஒட்டி அமைந்துள்ள மசூதியை அகற்ற வேண்டும் என்ற மனுவை மதுரா நீதிமன்றம் ஏற்று நவம்பர் 18ஆம் தேதிக்கு வழக்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
- நீட் தேர்வு எழுதிய 13.6 லட்சம் மாணவர்களில், 7.7 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண் பொதுப்போட்டிக்கு 147, உயர்ஜாதி பின் தங்கியோர்க்கு 129, ஓபிசி,எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கு 113 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இந்த ஆண்டு 57 சதவீத மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 49.6 சதவீதமாக இருந்தது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
- 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமையைக் கண்டறியப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை ஏற்றுக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம், மக்கள் கணக்கெடுப்பு ரிஜிஸ்திரார், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- குடந்தை கருணா
17.10.2020
No comments:
Post a Comment