மதுரை, அக். 14- டாக்டர் அம் பேத்கர் சமூக கலப்புத் திரும ணத் திட்டத்தின் கீழ் சலுகை வழங்கக் கோரிய வழக்கில் தாமதம் இல்லாமல் சலுகை கள் வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரத்தை சேர்ந்த முருகேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016- ஆம் ஆண்டு எனக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த வனிதா என்பவருக்கும் கலப்புத் திருமணம் நடை பெற்றது. எங்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள் ளது. திருமணம் சங்கரன்கோ வில் சார்பதிவாளர் அலுவ லகத்தில் பதிவு செய்யப்பட் டது. கடந்த 2013- ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சமூக கலப்புத் திருமணத் திட்டத் தின் கீழ் ரூ.2,50,000 வழங்கக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு விண்ணப்பம் செய் தும் இதுவரை பதில் இல்லை. எங்களுக்கு உரிய சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு திங்களன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசுத் தரப்பில் மனுதாரரின் விண்ணப்பம் நான்கு வாரங்களில் பரிசீலிக் கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டது.
இதையடுத்து டாக்டர் அம்பேத்கர் சமூக கலப்புத் திருமணம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகை ரூ. 2,50,000 வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment