புதுடில்லி,அக்.17பலவீனமானஏழை,எளிய மக்களுக்கே நோய்த் தொற்று அபாயம் அதிகம் என்ற நிலையில், அவர் களின் உயிரைக் காக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறுதொழில்களை மீட்கவும் இந்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக் குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா அறிவுறுத்தியுள் ளார்.
அய்எம்எப் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்திற்கு இடையே அய்எம்எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார் ஜிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியா வில் மக்கள் நலனைக் காப்பதற்குத்தான் முன் னுரிமை அளிக்க வேண்டும். இதற்குஎன்ன செய்ய வேண்டும் என கவனிக்கும் போது, நோய் தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடிய முதியவர்கள், ஏழைகள் உள்ளிட்ட பலவீனமான பகுதி மக்களைக் காப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதேபோல சிறு, குறு மற்றும் நடுத் தர தொழில் நிறுவனங்கள் கரோனா ஊரடங்கு பாதிப்பால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவற்றைக் காக்க தேவையான நடவடிக் கைகளை அரசு எடுத்து, அவற்றை மீண்டும் செயல்படும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். நிலைத்தன்மையற்ற சூழல், கடன்தொகை திரும்பாத நிலை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் மக்களின் உயிரைக் காப்பதற்குத்தான் முன் னுரிமை அளிக்க வேண்டும் என்றார். இந்திய அரசு அதன் வளர்ச்சிக்கேற்ப கரோனா ஊரடங்கு பாதிப்புகாலத்தில் மக்களுக்கு தேவையான சலுகைகளை அளித்துள்ளது. நிதி ரீதியாக 2 சதவிதமும், கடன் உத்தரவாதமாக 4 சதவிகித சலுகையும் அளித்துள்ளது. ஆனால், நேரடி நிதிஉதவியாக எதுவும் மக்களுக்கு வழங்கவில்லை.
வளர்ச்சியடைந்த நாடுகள் எத்தகைய பொருளாதார உதவிகளை அந்நாட்டு மக்களுக்கு அளித்தன; வலுவான பொருளாதாரம் உள்ள நாடுகள் எத்தகைய உதவிகளை வழங்கின என்பதை ஒப்பிடும்போது, இந்தியா அளித்த உதவி சற்றுக் குறைவுதான். இந்தியாவின் பொரு ளாதாரம் வலுவானது. தற்போது உருவாகியுள்ள நெருக்கடியில் இந்தியா மீண்டு வரும். அடுத்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகித அளவுக்கு இருக்கும்.
இவ்வாறு கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment