செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 24, 2020

செய்தியும், சிந்தனையும்....!

ஆம், நமக்காகத்தான்!


கரோனா நோயாளிகளின் தும்மல், இருமல்மூலம் கோவிட் 19 வைரஸ் 8 மீட்டர் தொலைவு வரை பரவும்: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


முகக்கவசம் அணிவது அரசுக்காக அல்ல. முகக் கவசம், தலைக்கவசம் அணிவதெல்லாம் நமக்கு நாமே செய்துகொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடே!


ஏழைகள் உயிர் மலிவா?


விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலை வெடித்து 6 பெண்கள் பலி.


இதுபோன்ற கொடுமைகள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.


ஏழைப் பெண்கள் தங்கள் வயிற்றுக்காக ஆபத்து விளைவிக்கக் கூடிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஞ்ஞானம் கோலோச்சும் ஒரு காலகட்டத்தில் உயிருக்கு ஆபத்து இல்லாத தடுப்பு முறைகள் கிடையாதா? ஏழைகள் உயிர் அவ்வளவு மலிவா?


கடவுளுக்குத் தெரியாமலா?


பெரியபாளையம் பொன்னேரி பகுதிகளில் கோவில் சிலைகள் திருட்டு, கோவில் உண்டியல்கள் உடைப்பு - திருடர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


அவனன்றி ஓரணுவும் அசையாது - அப்படியென்றால் இந்தத் திருட்டுக்குக் கடவுளும் துணை போயிருப்பாரோ!


இதுபோன்ற திருட்டுகளை செய்பவர்கள் நாத்திகர்களல்ல - பக்தி செலுத்தும் ஆத்திகர்கள்தான் என்று சொன்னது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்தான்! ('குமுதம்', 12.9.1996)


அறிக்கை


வெளியிடுவது


பஞ்சமா பாதகமா?


ஆளுநருக்குக் கடிதம், அறிக்கைகளால் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்: -முதலமைச்சர் பழனிசாமி.


முதலமைச்சர் கடிதம் எழுதுவதே கிடையாது - அறிக்கை வெளியிடுவதே கிடையாது என்றால் ஓர் அரசியல் கட்சிக்கு இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கவே தகுதியில்லாதவர் ஆகிவிடுவார் - எதிர்க்கட்சித் தலைவரின் கடமையைத்தானே தி.மு.க. தலைவர் செய்கிறார்.


ஓ, ஆளுநர் சொன்னதைக் கூட வெளியில் சொன்னால் தங்களுக்குப் பாதகம் என்று நினைப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.


விரைவில் என்றால்...?


மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகிதப் பிரச்சினை. விரைவில் முடிவு எடுப்பார் ஆளுநர்: - முதல்வர் பழனிசாமி


விரைவில் என்றால்... ஆளுநர் கணக்கில் மூன்று வருடம் கூட ஆகுமே! சந்தேகம் இருந்தால் அமைச்சர் ஜெயக்குமாரைக் கேட்டுத் தெரிந்துகொள்க!


கூடுதலாக ஒழிக்கவா?


இலங்கையில் அதிபருக்குக் கூடுதல் அதிகாரங்கள் - மசோதா நிறைவேற்றம்!


இன்னும் கூடுதலாக மிச்ச சொச்ச தமிழர்களின் வாழ்வை ஒழித்து முடிப்பதற்கா?


தோஷம் யாரால் வந்தது?


சென்னை பாரிமுனையில் தோஷங்களைக் கழிக்கும் திருவல்லீஸ்வரர் கோவில் இருக்குதாம்.


அவனன்றிதான் ஓரணுவும் அசையாதே- தோஷங்கள் வந்தது எப்படி? யார் பொறுப்பு?.


குழி தோண்டும் படலம்!


மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு: - 5 அமைச்சர்கள் ஆளுநர் சந்திப்பு.


உண்டா இல்லையா? என்று கூறுவதற்கு ஒன்றரை மாதம் தேவையா? மனம் இருந்தால்தானே மார்க்கம் கிடைக்கும். மத்திய பி.ஜே.பி. அரசு ஒடுக்கப்பட்ட மக்களின் வாய்ப்பை குழிதோண்டிப் புதைத்து - அதன்மீது உயர்ஜாதியினருக்கு வாய்ப்பு என்ற குரோட்டன்சை வளர்க்கிறது என்பது இன்னும் புரியவில்லையா?


குண்டக்க... மண்டக்க...


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்க


4 மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு.


இப்படி ஏதாவது மத்திய அரசை எதிர்த்து மாநிலங்கள் திரண்டால்தான் பி.ஜே.பி. வழிக்கு வரும் ஒரு சூழலை ஏற்படுத்தியது மத்திய


அரசே!


‘பாவம்' பிரதமர்!


இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், தனக்குக் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்தை நிர்வகிக்கப் போதுமானதாக இல்லாததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு.


ஒருதரம் அணியும் சட்டைக்கு ரூ.10 லட்சம் செலவு செய்யும் ஏழை பிரதமர் இந்தியாவில் இல்லையா?


No comments:

Post a Comment