மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை, அக். 16- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு,
பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு சட்டம் இயற் றியபோது, இதனால் ஏற்கெ னவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் நலன்கள் பாதிக்கப்படாது என தெரிவித்தது.
பொதுப் பிரிவில் இருந்தே, பொருளாதாரத்தில் நலிந்த இட ஒதுக்கீட்டுக்கான இடங் கள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம், பயிற்சி அதிகாரிகளை தேர்வு செய்ய வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் மற்றும் இதர பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து 10 சதவீத இடங்களை மோசடி யாக குறைத்து அவற்றை பொது பிரிவிலும், பொருளா தாரத்தில் நலிந்த பிரிவிற்கும் மாற்றியுள்ளது.
பொதுப் பிரிவு இடங்கள் 50%, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10%, தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மற் றும் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு 40% என்ற அள வில் இட ஒதுக்கீடு அறிவிப் பில் உள்ளது. அதாவது தாழ்த் தப்பட்டோர் இட ஒதுக்கீடு 15% என்பதற்கு பதிலாக 13% ஆக குறைக்கப்பட்டுள்ளது, பழங்குடியினர் ஒதுக்கீடு 7.5% என்பது 6% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% வழங்கவேண்டிய இட ஒதுக்கீட்டை வெட்டி 21% ஆக பறித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை அரச மைப்புச் சட்டத்திற்கு விரோ தமாக செய்யப்பட்டிருக்கும் மோசடியும், சமூகநீதியின் முக்கிய அங்கமாக உள்ள இட ஒதுக்கீட்டின் மீதான தாக்குதலுமாகும். இந்த அறிவிப்பினை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெறச் செய் வதுடன், இந்த அறிவிப்பைச் செய்திருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத் திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment