ஒற்றைப் பத்தி - சோழ ரா(பூ)ஜ்ஜியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

ஒற்றைப் பத்தி - சோழ ரா(பூ)ஜ்ஜியம்!

நாம் பழம் பெருமையை ரொம்பத்தான் பேசுகிறோம். இமயம்வரை சென்று ஆரி யப் படை வென்று புலிக் கொடி பொறித்தான் எங்கள் சோழ மாமன்னன் என்று மண்ணும், விண்ணும் அதிர தற்பெருமை முரசை ஓங்கி ஓங்கி அடித்து விளாசுகி றோம்.


ஆனால், வரலாறு என்ன கூறுகிறது?


இதோ:


தஞ்சாவூரில், புஞ்சைக் கிராமக் கல்வெட்டு. அதன் விவரம் வருமாறு: கோயில் பணியாளர்களுக்கு, வாழ்வியல் ஊதியமாக அளிக்கப்பட்ட நிலத்தை, சோழ அரசாங்க ஊர்ச் சபையார் கைக்கொண்டு, வேலையாள்களை வெளி யேற்றி விட்டனர். பணி யாளர்களோ, சோழப் பெருந் தன அதிகாரியிடம் முறை யிட்டுப் பார்த்தனர்; பய னில்லை. அந்தக் கொடுங் கோலை எதிர்க்க, அவர்கள் கோயில் முன் தீ வளர்த்து, நெருப்பில் இறங்கி உயிர்த் தியாகம் செய்தனர். தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள், கல் வெட்டுகள் மூலம் அரிதாகத் தெரிய வருகின்றன. மக்களே சிலர் எழுதி வைத்துள்ளார் கள். ஆனால், நாம் தான் பேசுவதில்லை.


நக்கன் ஸ்றீதேவி, மாசாத் துப் பூவேந்திய சோழ மாணிக்கத் தேவரடியாளு டன், திருவீதிப் பணி செய்ப வர்கள் திரண்டு, போராட் டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டி, சதுரி மாணிக்கம் என்ற தேவரடியாள், தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்ட, கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் விட்டாள்! (நாமோ அதே கோபுரத்தின் பிரம் மாண்டத்தில் மயங்கி, கோபு ரத்தின் இரத்தக் கறை அபி ஷேகத்தைக் கண்டுகொள் வதுகூட இல்லை)


சோழ நாட்டு மக்கள், வரி கொடா இயக்கம் நடத்தியது கூட உண்டு! அதை ஆடு துறைக் கல்வெட்டு பேசு கின்றது. பார்ப்பனர்கள் முதலிய சதுர்வேதி மங்கல நிலச் சொந்தக்காரர்கள் இடங்கை 96 வகை ஜாதி யினருக்கு இழைத்த கொடு மைகளைக் கல்வெட்டு கூறுகிறது. வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டு களும், ஆவணி ஊரில் கிடைத்துள்ளன. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும், 48,000 பூமியும், சோழ வம்சம் தோன்றிய நாள் முதலாய், எருமை - ஆ முதலியவைக்கு வரி கொடுத் ததே இல்லை. எனவே, சோழ மூவேந்த வேளாண் விதித்த புது வரியைக் கொடுக்க வேண்டியதில்லை! என முடிவு கட்டிய பொது மக்களின் தீர்மானமே கல்வெட்டாய் உள்ளது.


இவையெல்லாம் சோழப் பெருமைகளா?


ஆதாரம்:


'தி காமன்சென்ஸ்',


ஜூன் 2018


ராஜராஜனை தங்கள் தங்கள் ஜாதிக்குக் கொண் டாடும் ஜாதிக் கட்சிக்காரர்கள் சிந்திப்பார்களா?


 - மயிலாடன்


 


No comments:

Post a Comment