சேந்தநாட்டில் களத்தூரை சேர்ந்த தோழர்கள் செல்வகுமார், விஜய பிரவின், ப்ரவீனா, அஞ்சலி, மணிகண்டன், சம்பத், சிவா, சிறீதர், ஜெகன் முதலியவர்கள் புதிய வரவுகளாக இயக்கத்தில் இணைந்தனர். அவர்களுக்குக் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இணைப்புக் காரணமான மாவட்ட செயலாளர் பரணீதரனையும் பாராட்டினார். (22.10.2020, சேந்தநாடு)
தூத்துக்குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவர் மா.தெய்வப்பிரியா, டாஸ்நேவிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் செ.வள்ளி, சாண்டி பாலிடெக்னிக் மாணவர் செ.நவீன்குமார், காமராசர் கலைக்கல்லூரி மாணவர் ஆ.லெனின், வ.உ.சி.கல்லூரி மாணவர் ஆ.பிரபா ஆகியோர் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் முன்னிலையில் மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அனைவருக்கும் தந்தை பெரியார் இறுதிப்பேருரைப் புத்தகத்தை மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி வழங்கினார். காசி, உரத்தநாடு குணசேகரன், வே.செல்வம் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment