அமிர்தசரஸ், அக்.3 புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேர ணியில் செல்கிறார்.
மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேரணியில் செல்கிறார்.
இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) தொடங்கி 5-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த பேரணி நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ராகுல்காந்தியின் டிராக்டர் பேரணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 8 சதவீதம் பேரால் 60 சதவீதம் பேருக்கு பரவிய கரோனா
ஆய்வில் தகவல்
புதுடில்லி, அக்.3 இந்தியாவில் 8 சதவிகித நபர்களால் மட்டும் 60 சதவிகித பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 5 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் சயின்ஸ் பத்திரிகை யில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளான 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மூலம் யாருக்கும் தொற்று பரவவில்லை என்றும், பாதிக்கப்பட்ட 8 விழுக்காட்டினர் மூலம் மட்டுமே 60 சதவிகிதம் பேருக்கு கரோனா பரவியதாகவும் கூறப் பட்டுள்ளது.
பெரியவர்களை விட 14 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகளவில் சம வயதுள்ளவர்களுக்கு தொற்றை பரப்பு வதாகவும் கரோனாவால் இறந்தவர்களில் 45 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பேருந்து, ரயில் பயணங்கள் கரோனா பரவ அதிக வாய்ப் புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தொற்றால் இறப்பவர்கள் சராசரியாக 5 நாட்கள் வரை மருத்துவ மனையில் இருப்பதாக கூறப் பட்டுள்ளது.
சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு தெருக்கள் மீண்டும் தகரம் கொண்டு அடைப்பு
சென்னை,அக்.3, தமிழகத்தில் புதிதாக 5,595 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் தெருக்கள் தகரம் கொண்டு அடைக்கப் பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு,
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 3,417, பெண்கள் 2,178 என மொத்தம் 5,595 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில், 5,588 பேர் ஏற்கெ னவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அதிக பட்சமாக சென்னையில் 1,278 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 8,885 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் 12,013 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 46,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர் கள் உட்பட 43 பேர், தனியார் மருத்துவ மனைகளில் 24 பேர் என நேற்று மட்டும் 67 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 9,653 ஆக உயர்ந்துள் ளது. சென்னையில் மட்டும் 3,241 பேர் இறந் துள்ளனர். தமிழகத்தில் அதிக பட்சமாக சென்னையில் 1 லட்சத்து 70,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 188 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 75 லட் சத்து 26,688 பரிசோதனைகள் நடைபெற் றுள்ளன. நேற்று மட்டும் 84,991 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்த தெருவின் இரு புறமும் கட்டைகள், தகரங்கள் கொண்டு அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி யாக அறிவித்து முன்பு பேனர் வைக்க பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளா யினர். பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக் கப்பட்டதால், தெருக்களுக்கு பதில், தொடர்புடைய வீட்டின் நுழைவுப்பகுதி மட்டும் தகரம் கொண்டு அடைக்கப் பட்டது. அதன் பிறகு தொற்று குறையத் தொடங்கியதால், வீடுகளை தகரம் கொண்டு அடைக்காமல் அறிவிப்பு பேனர் மட்டும் கட்டப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் தெருக்களை தகரம் கொண்டு அடைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்கு மாம்பலம் ருக்மணி தெருவில் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், தெருவின் இருபுறமும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment